பாதுகாப்­பான இடை­­வெளியை வலியுறுத்த புதிய இயக்கம்

பாதுகாப்­பான இடை­­வெளியை வலியுறுத்த புதிய இயக்கம்

1 mins read
7f99e391-d003-45b2-aa76-ca8b12b824bc
பொது­மக்­கள் தங்­க­ளு­டைய சுற்­றுப்­பு­றத்தை தூய்­மை­யாக வைத்­தி­ருக்க ஊக்­கு­விக்­கப்­படும். உணவு நிலை­யங்­கள், காப்­பிக் கடை­கள் போன்ற இடங்­களில் குறைந்­தது ஒரு மீட்­டர் இடை­வெளி விதி­மு­றையை பின்­பற்ற வலி­யு­றுத்­தப்­படுகிறது. படம்: எஸ்டி, திமத்தி டேவிட். -

கொரோனா கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் நேற்று புதிய முயற்சி தொடங்­கப்­பட்­டது.

'எஸ்ஜி கிளீன்' தூதர்­கள் எனும் அந்த கட்­ட­மைப்பு பொது­மக்­க­ளி­டம் சமூ­கப் பொறுப்­பு­ணர்­வை­யும் தூய்­மை­யாக இருக்க வேண்­டிய அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தும்.

சுகா­தார, சுற்­றுப்­புற, நீர்­வள மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று அந்த புதிய கட்­ட­மைப்பை தொடங்­கி­வைத்­தார்.

எஸ்ஜி கிளீன் தூதர்­கள் தங்­க­ளு­டைய நண்­பர்­க­ளி­ட­மும் குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­ட­மும் சந்­திப்­ப­வர்­க­ளி­ட­மும் இரு முக்­கிய செய்­தி­க­ளை­யும் பரப்­பு­வார்­கள் என்று அமைச்­சர் சொன்­னார்.

தற்­போ­தைய நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யில் சமூ­கப் பொறுப்­பு­ணர்வு, தங்­களை தூய்­மை­யாக வைத்­தி­ருப்­பது ஆகிய செய்திகளை பரப்­பு­வது முக்­கி­யம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூரை பல்­வேறு வகை­யில் தூய்­மை­யாக வைத்­தி­ருப்­பதை வலி­யு­றுத்­தும் தேசிய இயக்­க­மான 'எஸ்ஜி கிளின்' பற்­றிய விழிப்­பு­ணர்­வில் கடப்­பாடு கொண்ட தொண்­டூ­ழி­யர்­கள் புதிய கட்­ட­மைப்­பில் அங்­கம் வகிப்­பார்­கள்.

இதில் விருப்­ப­முள்­ள­வர்­கள் தங்­க­ளு­டைய பெயரை தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தி­டம் தொண்­டூ­ழி­ய­ராக பதிந்­து­கொள்­ள­லாம்.

'எஸ்ஜி கிளீன்' தூதர்­க­ளாக செயல்­பட வாரி­யத்­தி­ட­மி­ருந்து பயிற்சிப் பொருட்­க­ளை­யும் அவர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.சுமார் 2,000 பேருக்கு பயிற்சி அளிக்க தேசிய சுற்­றுப்­பற வாரி­யம் திட்­ட­மிட்­டுள்­ளது.

உதா­ர­ண­மாக, பொது­மக்­கள் தங்­க­ளு­டைய சுற்­றுப்­பு­றத்தை தூய்­மை­யாக வைத்­தி­ருக்க ஊக்­கு­விக்­கப்­படும். உணவு நிலை­யங்­கள், காப்­பிக் கடை­கள் போன்ற இடங்­களில் குறைந்­தது ஒரு மீட்­டர் இடை­வெளி விதி­மு­றையை பின்­பற்ற வலி­யு­றுத்­தப்­படும்.