கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் சமூக முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. துணிவு நிதிக்கு $5.9 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடை சேர்ந்துள்ளது.
இந்தத் தொகையை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்த சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நோயாளிகள், சுகாதாரப் பராம ரிப்புத்துறை மற்றும் முன்னிலை ஊழியர்கள், பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சிங்கப்பூரர்கள், 'கொவிட் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங் களுக்கு உதவ இந்த நிதி பயன் படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
கிருமி பாதிப்பினால் பாதிக்கப் பட்ட 'செர்டிஸ்' அதிகாரி ஒருவர் இந்த நிதி மூலம் உதவி பெற்று உள்ளார்," என்றார் திரு லீ.
கடந்த 2003ஆம் ஆண்டில் சார்ஸ் நோய் பரவலின்போது அமைக்கப்பட்ட சமூக உண்டியலால் இந்த நிதி நிர்வகிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்ட முதல் மரணமாக மார்ச் 21ஆம் தேதி அன்று மரணமடைந்த 75 வயது பெண் குடும்பத்திற்கும் இந்நிதி உதவியுள்ளது.
"இது எந்த வகையிலும் குடும் பத்தின் வருத்தத்தைத் தணிக்காது என்றாலும், இந்த சிரமமான காலகட்டத்தில் ஒரு சிறு நிதி உதவியை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அமைச்சர் கூறினார்.
துணிவு நிதியின் கோவிட் -19 நிவாரணத் திட்டங்கள், அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் போன்ற விவரங்கள் www.ncss.gov.sg/thecouragefund என்ற இணையப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையில், முன்னிலை ஊழியர்களின் பணிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைதட்டும் நிகழ்வு இன்று இரவு 8 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இதற்கான அழைப்பு பேஸ்புக் மூலம் விடுக்கப்பட்டு வருகிறது. 'Clap For #SGUnited' என்ற இந்த அழைப்பு, இன்றிரவு சரியாக 8 மணிக்கு சன்னல்கள், வீட்டு வாசல், வெளிவாசல்களில் மக்கள் நின்றபடி ஒன்று சேர்ந்து கைதட்டி பாராட்டுமாறு அழைக்கிறது.

