முதியவரின் கண்ணில் குத்தியவருக்கு ஓராண்டு சிறை

முதியவரின் கண்ணில் குத்தியவருக்கு ஓராண்டு சிறை

1 mins read
7b62d853-9ba5-4e34-b25d-3de105f57fdf
பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடாக $5,258.46 வழங்க லிம் வீ மிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுவா சூ காங் அவென்யூ 3 வழியாக தாம் நடந்து சென்றுகொண்டிருந்தபோது எதிர்த்திசையிலிருந்து வந்த மின்ஸ்கூட்டர் ஓட்டுநர் ஒருவர் தம்மை மோதப் பார்த்ததைத் தொடர்ந்து, லிம் வீ மிங் என்பவருக்கும் மின்ஸ்கூட்டர் ஓட்டுநரான திரு கோ சுங் பெங் என்பவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

2017ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் இருவருக்கும் இடையே வாக்குவதாம் முற்ற, திரு கோவின் இடது கண்ணில் லிம் குத்தினார். கண்ணிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியதைத் தொடர்ந்து, திரு கோ ஆம்புலன்சில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இடது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டதன் காரணமாக, 68 வயது திரு கோ அந்த கண்ணில் பார்வையை இழந்தார்.

குற்றம் புரிந்த 46 வயது லிம்முக்கு இன்று (மார்ச் 30) ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, நஷ்ட ஈடாக திரு கோவுக்கு $5,258.46 வழங்க லிம்முக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

$10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள லிம், சிறைத் தண்டனையை ஆற்ற ஏப்ரல் 6ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைவார்.

குறிப்புச் சொற்கள்