தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலவச ஒளிவழிகளை வழங்கும் சிங்டெல்

1 mins read
5975b4a0-1439-461a-a413-c2a929ba0705
சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்காக குறிப்பிட்ட சில ஒளிவழிகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு சிங்டெல் நிறுவனம் இலவசமாக வழங்கவிருக்கிறது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா தொற்று காரணமாக அதிகமானோர் தங்கள் வீடுகளில் கூடுதல் நேரத்தைச் செலவிட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்காக குறிப்பிட்ட சில ஒளிவழிகளை அடுத்த மூன்று மாதங்களுக்கு சிங்டெல் நிறுவனம் இலவசமாக வழங்கவிருக்கிறது.

டிஸ்கவரி, ஏஷியன் ஃபுட் நெட்வொர்க், கார்ட்டூன் நெட்வொர்க், நிக்கலோடியன் போன்றவை அவற்றுள் சில.

அத்துடன், ஒற்றுமையை வெளிப்படுத்தும்விதமாக சிங்டெல் இயக்குநர் குழு உறுப்பினர்கள் வரும் நிதியாண்டில் 10% ஊதியத்தைக் குறைத்துக்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

முன்னதாக, செலவுக் குறைப்பு நடவடிக்கையாக செயல்பாட்டு மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பதாக சென்ற மாதத் தொடக்கத்தில் சிங்டெல் அறிவித்திருந்தது.

#சிங்கப்பூர் #சிங்டெல் #இலவச ஒளிவழி

குறிப்புச் சொற்கள்