வீட்டில் இருந்து கற்றல் நடவடிக்கை தொடங்கியது

வீட்டில் இருந்து கற்றல் நடவடிக்கை தொடங்கியது

2 mins read
44a1671a-2062-48ed-b818-d3a5559259a9
கொரோனா கிருமித் தொற்று பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் வாரம் ஒரு­நாள் மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து பாடங்­க­ளைக் கற்­கும் நட­வ­டிக்கை நேற்று தொடங்­கி­யது. படம்: எஸ்டி -

கொரோனா கிருமித் தொற்று பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் வாரம் ஒரு­நாள் மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து பாடங்­க­ளைக் கற்­கும் நட­வ­டிக்கை நேற்று தொடங்­கி­யது.

கிட்­டத்­தட்ட 200,000 தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் நேற்று பள்­ளி­யில் கொடுக்­கப்­பட்ட நேர அட்­ட­வ­ணைப்­படி வீட்­டில் இருந்து படித்­த­னர்.

கல்வி அமைச்சு உரு­வாக்­கி­யுள்ள சிங்­கப்­பூர் மாண­வர்­கள் கற்­றல் தளம் (Singapore Student Learning Space) என்ற இணைய கற்­றல் தளத்­தில் சிலர் காலை 7.30மணிக்கே இணைந்­த­னர். சில­ருக்கு பிற்­ப­க­லில் நேரம் குறிக்­கப்­பட்­டி­ருந்­தது.

வீட்­டி­லி­ருந்து கற்­ற­லில் இணைய வகுப்­பு­களும் பயிற்­சித் தாட்­க­ளைச் செய்­வ­தும் இடம்­பெ­றும். உடற்­பயிற்சி வகுப்­பு­களும் இணை­யம் வழி நடை­பெற்­றன. யுடி­யூப்­பில் இடம்­பெற்ற பயிற்சிக் காணொ­ளி­யைப் பார்த்து மாண­வர்­கள் பயிற்சி செய்­த­னர்.

இந்­தத் தளத்­தில் இணைய சில மாண­வர்­கள் சிர­மத்தை எதிர்­நோக்­கி­ய­தாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்ட கல்வி அமைச்­சர் ஓங் யி காங், தொழில்­நுட்­பத்தை சீர்­செய்­யும் வரை பொறுத்­துக்­கொள்­ளுங்­கள் என்று கேட்­டுக்­கொண்­டார்.

பல­வற்றை சரிப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அனைத்து மாண­வர்­க­ளை­யும் வாரம் ஒரு­நாள் வீட்­டி­லி­ருந்து கற்­கும் நட­வ­டிக்­கையை தொடங்­கு­வது முக்­கி­யம் என்­றார் அவர்.

இந்த நட­வ­டிக்­கையை நேற்று தொடங்­கிய பெற்­றோர், மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்த அமைச்­சர் ஓங், "இது எளி­தா­ன­தல்ல. குறை­கள் அற்­ற­தும் அல்ல. இத்­த­கைய பரி­சோ­தனை கால­கட்­டத்­தில் எங்­க­ளது கூட்­டு­மு­யற்­சி­க­ளைப் பயன்­படுத்­து­கி­றோம்," என்­றார்.

அதே­நே­ரத்­தில், மாண­வர் பரா­ம­ரிப்பு தொடர்பாக மாற்று ஏற்­பாடு செய்ய முடி­யாத குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பிள்­ளை­க­ளுக்கு பள்­ளி­கள் திறந்திருந்தன.

செம்­ப­வாங் தொடக்­கப்­பள்­ளிக்கு நேற்று சென்ற அமைச்­சர் ஓங், 20 மாண­வர்­கள் பள்­ளிக்கு வந்­த­தாக குறிப்­பிட்­டார்.

"பள்­ளிக்கு வந்த சில மாண­வர்­க­ளின் வீடு­களில் வைஃபை வசதி இல்லை. மற்ற சில­ரின் பெற்­றோர் வேலைக்­குச் செல்­கின்­ற­னர். இதில் பல மாண­வர்­கள் கணினி அறைக்­குச் சென்று இணைய வகுப்­பு­களில் பங்­கேற்­ற­னர். சிலர் வகுப்­பறை­யில் அமர்ந்து வாசிப்பு, பயிற்சி­களை எழு­து­வது போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்," என்­றார் திரு ஓங்.

புதன்­கி­ழ­மை­களில் தொடக்­கப் பள்­ளி­கள், வியா­ழக்­கி­ழ­மை­களில் உயர்­நி­லைப் பள்­ளி­கள், வெள்­ளிக்­கி­ழ­மை­களில் தொடக்­கக் கல்­லூ­ரி­கள் மற்­றும் மில்­லெ­னியா கல்வி நிலை­யம் என வாரம் ஒரு­நாள் வீட்­டி­லி­ருந்து கற்­கும் நட­வ­டிக்கை இடம்­பெ­றும் என கல்வி அமைச்சு சென்ற வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்தது.

பிள்­ளை­கள் வீட்­டில் இருந்து கற்­கும் நாட்­கள் அதி­கப்­ப­டுத்­தப்­படும்­பட்­சத்­தில், வேலைக்­குச் செல்­லும் பெற்­றோர்­கள் தங்­கள் பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்­கொள்­வ­தற்­கான மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்ய இந்­தத் தரு­ணத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் அமைச்சு அறி­வு­றுத்தி இருக்­கிறது.