'டிரேஸ் டுகெ­தர்' செயலி; ஒரு மில்லியன் பேர் பதிவிறக்கம்

1 mins read
71796a1f-0e06-42f2-9998-fa742bdb0244
'டிரேஸ் டுகெ­தர்' எனும் விவேக கைபேசி செய­லியை சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் பேர் இது­வ­ரை­யில் பதி­வி­றக்­கம் செய்­துள்­ளதாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்­று தெரி­வித்­தார். படம்: எஸ்டி -

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கி­யவரு­டன் அவ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளைக் கண்­ட­றிய உத­வும் 'டிரேஸ் டுகெ­தர்' எனும் விவேக கைபேசி செய­லியை சிங்­கப்­பூ­ரில் கிட்­டத்­தட்ட ஒரு மில்­லி­யன் பேர் இது­வ­ரை­யில் பதி­வி­றக்­கம் செய்­துள்­ளதாக தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்­று தெரி­வித்­தார்.

இந்­தச் செயலி சிறப்­பு­டன் செயல்­பட சிங்­கப்­பூர் மக்­கள் அனை­வ­ரும் இல்­லா­விட்­டா­லும் முக்­கால்­வா­சிப் பேரா­வது பதி­விறக்­கம் செய்ய வேண்­டும். அப்­போ­து­தான் அதனை அடை­யா­ளம் கண்­ட­றி­யும் சிறந்த சாத­ன­மா­கப் பயன்­ப­டுத்த முடி­யும் என்­றார் அவர்.

ஒரு மில்­லி­யன் என்­பது சாதனை என்­றா­லும், தற்­போதைய மக்­கள் தொகை­யில் ஆறில் ஒரு­வர்­தான் பதி­வி­றக்­கம் செய்­துள்­ளனர். மேலும் பதி­வி­றக்­கம் செய்­தால் மட்­டும் போதாது. மக்­கள் புளூ­டூத்தை செயல்­பாட்­டில் வைத்­தி­ருக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.