ராணுவ முகாமில் பாதுகாப்பான இடைவெளி தூரம்

1 mins read
2bfc2e4a-6d5a-43e9-9d7e-6ee12ecb9408
தெக்­கோங் தீவில் உள்ள அடிப்­படை ராணு­வப் பயிற்சி முகா­மில் தேசிய சேவை செய்­யும் தங்­கள் பிள்­ளை­கள் நாட்­டுப் பற்­று­று­தியை ஏற்­கும் நிகழ்வை பெற்­றோர் இனி அங்கு சென்று நேர­டி­யா­கக் காண முடி­யாது. படம்: எஸ்டி -

தெக்­கோங் தீவில் உள்ள அடிப்­படை ராணு­வப் பயிற்சி முகா­மில் தேசிய சேவை செய்­யும் தங்­கள் பிள்­ளை­கள் நாட்­டுப் பற்­று­று­தியை ஏற்­கும் நிகழ்வை பெற்­றோர் இனி அங்கு சென்று நேர­டி­யா­கக் காண முடி­யாது.

அதற்­குப் பதி­லாக அவர்­கள் அந்த நிகழ்ச்­சியை காணொளி மூலம் கண்­டு­க­ளிக்­க­லாம்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தனது போராட்­டத்தை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­கள் முடுக்கி விட்­டுள்­ளன. இதன் கார­ண­மாக பொது­மக்­கள் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் தூர இடை­வெளி­யைக் கடைப்­பி­டிக்க வலி­யு­றுத்த, ராணுவ வீரர்­க­ளுக்கு அடிப்­படை பயிற்சி அளிக்­கப்­படும் தெக்­கோங் தீவில் உள்ள ராணுவ முகா­முக்­குச் சென்று அங்­குள்ள வச­தி­களை வீரர்­க­ளின் பெற்­றோர் காண முடி­யாது.

மேலும், கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யும் இன்று வியா­ழக்­கி­ழ­மை­யும் தேசிய சேவைக்­காக திரட்­டப்­பட்­டுள்ள 1,400 பேர் ராணு­வப் பயிற்­சி­யின்­போ­தும் பாது­காப்­பான இடை­வெளி தூரத்­தைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

இதற்­காக அந்த வீரர்­கள் ஓரி­டத்­தி­லி­ருந்து இன்­னொரு இடத்­துக்கு செல்­லும்­போது, முன்­போல் இல்­லா­மல், சிறு சிறு பிரி­வு­க­ளா­கச் செல்ல வே;ண்டும். அது­போல், ஓட்­டப் பயிற்­சி­கள், ஆயு­தப் பயிற்­சி­கள் போன்­ற­வை­யும் சிறு சிறு பிரி­வு­க­ளாக நடத்­தப்­படும்.

இதன்ெ­தா­டர்­பில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­களும் தனது பாது­காப்­பான இடை­வெளி தூர நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்­தும் என்­றும் அத்­தி­யா­வ­சி­ய­மில்­லாத ராணுவ முகாம் பயிற்­சி­கள் அனைத்­தும் இம்­மா­தம் 30ஆம் தேதி வரை ஒத்­தி­வைக்­கப்­படும் என்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தற்­காப்பு அைமச்சு அறி­வித்­தி­ருந்­தது.