தெக்கோங் தீவில் உள்ள அடிப்படை ராணுவப் பயிற்சி முகாமில் தேசிய சேவை செய்யும் தங்கள் பிள்ளைகள் நாட்டுப் பற்றுறுதியை ஏற்கும் நிகழ்வை பெற்றோர் இனி அங்கு சென்று நேரடியாகக் காண முடியாது.
அதற்குப் பதிலாக அவர்கள் அந்த நிகழ்ச்சியை காணொளி மூலம் கண்டுகளிக்கலாம்.
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தனது போராட்டத்தை சிங்கப்பூர் ஆயுதப் படைகள் முடுக்கி விட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்த, ராணுவ வீரர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படும் தெக்கோங் தீவில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வசதிகளை வீரர்களின் பெற்றோர் காண முடியாது.
மேலும், கடந்த செவ்வாய்க்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் தேசிய சேவைக்காக திரட்டப்பட்டுள்ள 1,400 பேர் ராணுவப் பயிற்சியின்போதும் பாதுகாப்பான இடைவெளி தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதற்காக அந்த வீரர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும்போது, முன்போல் இல்லாமல், சிறு சிறு பிரிவுகளாகச் செல்ல வே;ண்டும். அதுபோல், ஓட்டப் பயிற்சிகள், ஆயுதப் பயிற்சிகள் போன்றவையும் சிறு சிறு பிரிவுகளாக நடத்தப்படும்.
இதன்ெதாடர்பில் சிங்கப்பூர் ஆயுதப் படைகளும் தனது பாதுகாப்பான இடைவெளி தூர நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்றும் அத்தியாவசியமில்லாத ராணுவ முகாம் பயிற்சிகள் அனைத்தும் இம்மாதம் 30ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை தற்காப்பு அைமச்சு அறிவித்திருந்தது.

