சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியில் மேலும் நான்கு கட்சிகள்

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியில் மேலும் நான்கு கட்சிகள்

1 mins read
571a435c-b623-4da3-8447-83836c97f368
அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதாக இருந்த நான்கு எதிர்க்கட்சிகள் தற்போது சிங்கப்பூர் ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளன. படம்: எஸ்டி -

அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதாக இருந்த நான்கு எதிர்க்கட்சிகள் தற்போது சிங்கப்பூர் ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளன.

சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை (சிங்ஃபர்ஸ்ட்), மக்கள் அதிகாரக் கட்சி (பிபிபி), சீர்திருத்தக் கட்சி (ஆர்.பி.) ஜனநாயக முற்போக்குக் கட்சி (டிபிபி) ஆகிய கட்சிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட்டணி யில் சேரக் கோரி சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பியதாக சீர்திருத்தக் கட்சி யின் தலைவர் ஆண்டி ஸு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு அபு முகமது கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதி செய்தார்.எனினும், அவர்களின் உறுப்பியம் குறித்த முடிவு தனது சொந்த விருப்பப்படி எடுக்கப்படாது என்றும் மத்திய செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பொதுத் தேர்தலுக்கு முன்னர்தான் பொதுக் குழு கூடும் என்று அவர்களிடம் கூறியதை அவர் உறுதிப்படுத்தினார். தற்போதைய கொவிட்-19 பரவல் சூழ்நிலை மற்றும் உறுப்பினர்களின் தனிப் பட்ட கடமைகள் காரணமாக சிறப்புக் கூட்டத்தை நடத்துவது கடினம் என்றும் அவர் கூறினார்.