வருமான வரி படிவத்தை மே 31 வரை சமர்ப்பிக்கலாம்

கொவிட்-19 சிரம காலத்தில் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக் கும் உதவும் நோக்கில் இவ்வாண்டுக்கான வருமான வரி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மே 31 வரை உள்நாட்டு வருவாய் ஆணையம் நீட்டித்துள்ளது. 

அதேபோல இவ்வாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும் கணக்காண் டுக்கான ஜிஎஸ்டி வருவாய் தாக்கல் தேதி மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக இந்தக் காலக்கெடு ஏப்ரல் மாதத் தில் முடிவுறும்.