நாடு திரும்பும் அதிக மலேசியர்கள்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதை அடுத்து இந்நாட்டில் தற்போது தங்கியுள்ள மலேசியர்களில் அதிகமானோர் தாயகம் திரும்புவர் என ஜோகூர் குடிநுழைவு துறை எதிர்பார்க்கிறது.

ஜோகூர் பாலத்திலுள்ள சுல்தான் இஸ்கண்டர் சுங்கச் சாவடி, இரண்டாம் இணைப்பிலுள்ள 'கொம்பிளெக்ஸ் சுல்தான் அபு பக்கார்' சாவடி ஆகியவற்றில் மலேசிய குடிமக்கள் பெருவாரியாக வருவர் என எதிர்பார்ப்பதாகவும் அதற்காகத் தயாராகி வருவதாகவும் மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைவர் திரு பகருடின் தாகிர் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் 14ஆம் தேதிக்கும் இடையே நாடு திரும்பும் மலேசியர்களின் எண்ணிக்கை, மார்ச் 18 முதல் 31 வரையிலான காலக்கட்டத்தின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் எனத் திரு பகருடின் தெரிவித்தனர். சிங்கப்பூரில் மலேசியர்கள் வேலை செய்வதில் எதிர்நோக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பும் மலேசிய ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் 14 நாள் தனிமைப்படுத்துதலுக்கான உத்தரவு அவர்களுக்கு ரத்து செய்யப்படும் என்று மலேசியாகினி தெரிவித்தது. அவர்கள் சிங்கப்பூரில் சுவாப் சோதனை செய்துகொண்டு பின்னர் அந்தச் சோதனைக்கான சான்றிதழை மலேசியாவிற்குள் நுழையும்போது அதிகாரிகளிடம் காண்பிக்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!