சிங்கப்பூரில் புதிதாக 120 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்  

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிதாக 120 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்நோயாளில் நால்வருக்கு வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டது. எஞ்சிய 116 பேருக்கு சிங்கப்பூரிலேயே இந்நோய் தொற்றியது.

உள்ளூரில் கிருமித்தொற்று ஏற்பட்டோரில் 39 பேர்  சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தவாசிகள். மற்ற 76 பேர் நீண்டகால வேலை அட்டைதாரர்கள்.

இதுவரை சிங்கப்பூரில் மொத்தம் 1,309 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டுள்ள இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்11 டார்மிட்டரி@பொங்கோல் மற்றும் டோ குவான் வட்டாரத்திலுள்ள வெஸ்ட்லைட் என்ற அந்த தங்குமிடங்களில் 62  சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள கிட்டத்தட்ட 20,000 ஊழியர்கள் அடுத்த 14 நாட்களுக்குத் தங்களது அறைகளில் தனிமைப்படுத்தப்படுவர்.