நாடாளுமன்றத்தில் இன்று ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டம்

கொரோனா கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூர் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் வேளை­யில், துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட் தமது அமைச்­சர்­நிலை அறிக்­கையை இன்று பிற்­ப­கல் 2 மணிக்கு நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­வார். நிதி அமைச்சு இந்தத் தகவலைத் தெரிவித்தது.

அதில் வர்த்­த­கங்­கள், ஊழி­யர்­கள், குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் ஒற்­று­மைக்­கான வரவுசெலவுத் திட்­டத்தை (Solidarity Budget) அவர் அறி­விப்­பார்.

“கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­படுத்த சிங்­கப்­பூர் தனது வர­லாற்­றி­லேயே முதன்­மு­த­லாக பள்­ளி­களை ஒரு மாத காலத்­துக்கு மூடு­கிறது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் உள்­ளூ­ரி­லும் உலக அள­வி­லும் பெரிய அளவு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. பொரு­ளி­யல் ஏற்­கெ­னவே பேரடி வாங்­கி­யி­ருக்­கும் வேளை­யில் நமது மக்­க­ளைப் பாது­காக்க வலு­வான நட­வ­டிக்­கை­கள் தேவை.

“இரண்டு மாதங்­க­ளுக்­குள் மூன்­றா­வது முறை­யாக ஆத­ர­வுத் திட்­டங்­கள் அறி­விக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன,” என்று திரு ஹெங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி 18ஆம் தேதி ஐக்­கி­யப்­ப­டுத்­தும் வர­வு­செ­ல­வுத் திட்­ட­மும் மார்ச் 26ஆம் தேதி மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­ட­மும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவ்­விரு திட்­டங்­க­ளின் ஒட்­டு­மொத்த மதிப்பு கிட்­டத்­தட்ட $55 பில்­லி­யன்.

வேலை­க­ளைப் பாது­காப்­பது, நிறு­வ­னங்­கள் உட­னடி சவால்­களை எதிர்­கொள்ள உத­வு­வது, பொரு­ளி­யல் மற்­றும் சமு­தாய மீள்­தி­றனை வலுப்­ப­டுத்­து­வது ஆகிய அம்­சங்­களில் இந்த வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் கவ­னம் செலுத்­து­கின்­றன.

“ஐக்­கி­யம், மீள்­தி­றன், ஒற்­றுமை - மக்­க­ளாக நாம் யார் என்­பதை இந்­தப் பண்­பு­ந­லன்­கள் எடுத்­துக்­கூ­றும்,” என்று கூறிய துணைப் பிர­த­மர் ஹெங், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரை இந்­தத் தலை­மு­றை­யின் முக்­கிய அத்­தி­யா­யம் என வர்­ணித்­தார்.

நாட்­டிற்கு வலு­வான அடித்­தளத்தை அமைத்து சேமித்­துக் கொடுத்த முந்­தைய தலை­முறை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அவர் நன்றி தெரி­வித்­தார்.

“எந்­த­வோர் அலை­யை­யும் போல இந்த அலை­யும் தணிந்­த­வு­டன், நாம் ஒரு வலு­வான சமு­தா­ய­மாக நமது பிள்­ளை­க­ளுக்­கும் பேரப்­பிள்ளை­க­ளுக்கும் மேலும் சிறந்த எதிர்காலத்தை உரு­வாக்­கு­வோம் என்ற நம்­பிக்கை எனக்கு உள்­ளது,” என்­றார் அவர்.

துணைப் பிர­த­மர் ஹெங்­கின் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை பல்­வேறு செய்­தித் தளங்­களில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­படும்.

மார்ச் 26ஆம் தேதி அவர் தாக்­கல் செய்த மீட்­சிக்­கான வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்கை குறித்த விவா­த­மும் நாடா­ளு­மன்­றத்­தில் இடம்­பெ­றும்.

அந்த விவா­தத்தை துணைப் பிரதமர் ஹெங் நாளை முடித்து வைப்­பார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!