நாளை முதல் ‘ஐசிஏ’ கட்டடத்தில் அவசர சேவைகள் மட்டும் உண்டு 

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் (ஐசிஏ) தலைமையகக் கட்டடத்தில் நாளை முதல் அவசரமான சேவைகளுக்கான கோரிக்கைகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கோரிக்கை களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

மாறாக, பொதுமக்கள் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் உள்ள மின்னியல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஏப்ரல் 7 அல்லது அதற்குப் பிறகு நேரப் பதிவு செய்துகொண்டோர், மே 4ஆம் தேதிக்குப் பிறகு அவற்றை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது. அவசர கோரிக்கை முகப்புகள் வழங்கப்படும் சேவைகள் பற்றிய விவரங்கள் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.