'சமூகச் சேவைகள் அத்தியாவசியமானவை'

'சமூகச் சேவைகள் அத்தியாவசியமானவை'

1 mins read
3be2464d-c692-4bb5-a02b-52e3aa9ea3dc
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இன்றுமுதல் அடுத்த மாதம் 4ஆம் தேதிவரை நாடு முழுவதும் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் நடப்புக்கு வருகின்றன.

இதற்கிடையே சமூகச் சேவை அலுவலகங்கள், மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், குடியிருப்பு மற்றும் இல்லம் சார்ந்த பராமரிப்புச் சேவைகள், சமூக மனநலச் சேவைகள் ஆகியவை அத்தியாவசியமானவை என்ற நிலையில் அவை இந்த ஒருமாத காலத்தில் தொடர்ந்து செயல்படும் என்று நேற்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் கூறினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நோயாளிகள், வாடிக்கையாளர்கள், பயனீட்டாளர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று திரு லீ விளக்கினார்.

இந்நிலையில் பெரியவர் மற்றும் குழந்தை பாதுகாப்புச் சேவைகளும் தொடர்ந்து இயங்கும் என்று அவர் சொன்னார்.

மூத்தோருக்கான நடவடிக்கை மையங்கள் இந்த ஒரு மாதத்திற்கு இல்லாவிட்டாலும் அங்குள்ள ஊழியர்கள் தொடர்ந்து மூத்தோரைக் கண்காணிப்பதுடன் தேவை ஏற்பட்டால் நேரடியாகச் சென்றும் பார்ப்பர் என்றார் திரு லீ. "கொவிட்-19 சூழலால் பல சவால்கள் வந்தாலும் நம் உறவுகளை வலுவாக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது," என்று திரு லீ குறிப்பிட்டார்.