காலியாகச் சென்ற ரயில்கள், வெறிச்சோடிய தெருக்கள்

காலியாகச் சென்ற ரயில்கள், வெறிச்சோடிய தெருக்கள்

2 mins read
cdc1e12d-1935-444f-948d-82e41fe2fe05
நகரை நோக்கிச் செல்லும் இந்த ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டும் அமர்ந்திருக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நகரை நோக்­கிச் செல்­லும் எம்­ஆர்டி ரயில்­களில் நேற்று இருக்­கை­கள் காலி­யாக இருந்­தன. வழக்­க­மாக பர­ப­ரப்­பாக காணப்­படும் ராஃபிள்ஸ் பிளேஸ் எம்­ஆர்டி நிலை­யம் வெறிச்­சோடி காணப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மிப் பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான அதி­ர­டித் திட்­டம் நடப்­புக்கு வந்த முதல் நாளான நேற்று நில­வ­ரத்­தைக் கண்­ட­றிய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­திக்­குழு தீவின் பல இடங்­க­ளுக்­குச் சென்­றது.

அலு­வ­லக ஊழி­யர்­கள் பணி­புரி­யும் மத்­திய வர்த்­தக வட்­டா­ரம் மக்­கள் நட­மாட்­ட­மின்றி காணப்­பட்­டது.

தீவு முழு­வ­தும் பெரும்­பா­லான வேலை­யி­டங்­கள் மூடப்­பட்­டுள்­ளன. பள்­ளி­களில் நேற்று காலை பிள்­ளை­க­ளைப் பெற்­றோர் வாக­னங்­களி­லி­ருந்து இறக்­கி­விட்­ட­தைத் தொடர்ந்து, சாலை­யில் வாக­னப் போக்­கு­வ­ரத்து குறைந்­தது.

இன்று முதல் மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து கற்­கும் முறை நடப்­புக்கு வருவதைத் தொடர்ந்து, சாலை­களில் வாக­னப் போக்­கு­வ­ரத்து மேலும் குறை­யக்­கூ­டும்.

வீட­மைப்­புப் பேட்­டை­க­ளுக்கு அருகே ஈரச் சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள், இதர உண­வ கங்­கள் அனைத்­தும் திறந்­தி­ருந்­தன.

ஆனால், வாடிக்­கை­யா­ளர்­கள் உண­வுக் கடை­களில் உண­வ­ருந்த முடி­யாது. உண­வைப் பொட்­ட­லங்­களில் கட்டி வெளியே எடுத்­துச் செல்ல மட்­டும் முடி­யும்.

இந்­தக் கால­கட்­டத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­களை வழங்­கும் சில வேலை­யி­டங்­கள் பட்டியலில் வங்­கி­களும் அடங்­கும்.

அவை திறந்­தி­ருக்க அனு­மதி வழங்­கப்­பட்­டா­லும், வங்­கிக் கிளை­களில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கையை வங்­கி­கள் குறைத்­துள்­ளன.

உண­வங்­கா­டிக் கடை­களில் கிண்­ணங்­கள், கரண்­டி­க­ளைக் கடைக்­கா­ரர்­கள் எடுத்து வைத்­து­விட்­ட­னர். உணவை வெளி­யில் எடுத்­துச் செல்­வ­தற்­கான பாக்­கெட்­டு­கள் மட்­டும் இருந்­தன. உண­வங்­காடி நிலை­யங்­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் உண­வ­ருந்­தி­னால் அவர்­க­ளுக்­கும் உணவை விற்ற சம்­பந்­தப்­பட்ட கடைக்­கா­ர­ருக்­கும் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்­ப­தைத் தாங்­கள் உணர்ந்­தி­ருப்­ப­தாக கடைக்­கா­ரர்­கள் பலர் கூறி­னர்.

பிடோக் பேருந்து சந்­திப்பு உண­வங்­காடி நிலை­யத்­தில் தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் சிலர் நேற்று காணப்­பட்­ட­னர். வரி­சை­யில் நிற்­ப­வர்­க­ளுக்கு இடையே பாது­காப்­பான தூர இடை­வெளி இருப்­பதை உறு­தி­செய்­யு­மா­றும் உண­வங்­காடி நிலை­யத்­தில் உண­வ­ருந்த வேண்­டாம் என்­றும் அதி­கா­ரி­கள் வாடிக்­கை­யா­ளர்­களுக்கு அறி­வு­றுத்­தி­னர்.

சந்­தை­யில் பண்­பு­ரி­ப­வர்­களும் உண­வங்­காடி நிலை­யங்­களில் கடை­கள் வைத்­தி­ருப்­ப­வர்­களும் அமர்ந்து உண­வ­ருந்­து­வ­தற்கு இடம் கிடைப்­பது சவா­லாக இருப்­ப­தாக சிலர் தெரி­வித்­த­னர்.

"தங்­க­ளது சொந்த கடை­க­ளுக்கு முன்­னால் அமர்ந்து உண­வ­ருந்­தி­ய­தற்­காக கடைக்­கா­ரர்­கள் சிலர் விமர்­ச­னத்­திற்கு ஆளா­கி­னர். அவர்­களும் உணவு உண்ண வேண்­டும். வேறெங்கு சென்­று­ அவர்­க­ள் உண­வு அருந்துவர்?" என்று கிம் மோ சந்­தை­யில் இறைச்­சிக் கடை நடத்­தும் திரு பில்லி இயோ கேள்வி எழுப்­பி­னார்.

புதிய கட்­டுப்­பா­டு­க­ளுக்கு மக்­கள் உட்­பட்டு நடக்­கின்­ற­னரா என்­ப­தைப் பார்­வை­யிட, பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 2,600 அதி­கா­ரி­கள் தீவு முழு­வ­தும் உள்ள பல இடங்­க­ளுக்­குச் சென்­ற­னர்.

கடைத்­தொ­கு­தி­களில் உள்ள பேரங்­கா­டி­கள், உண­வ­கங்­க­ளைத் தவிர்த்து, பெரும்­பா­லான கடை­கள் மூடப்­பட்­டுள்­ள­தால் தீவு முழு­வ­தும் உள்ள கடைத்­தொ­கு­தி­கள் அமை­தி­யாகக் காணப்­பட்­டன.