லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு கடைவீட்டில் இன்று (ஏப்ரல் 9) காலை தீப்பற்றியது.
112A டெஸ்கர் சாலையில் உள்ள அந்த வீடு அமைந்திருக்கும் பகுதியில் கரும்புகை குபுகுபுவென வெளியாவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன.
இந்தச் சம்பவம் பற்றி காலை 10.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஓர் அறையில் இருந்த பொருட்களில் தீப்பற்றியதாகத் தெரிவித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், இரண்டு தண்ணீர்க் குழாய்களிலிருந்து நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்ததாகக் கூறினர்.

