பூங்காக்களில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள்

பூங்காக்களில் மக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள்

1 mins read
b788a3ef-d734-4d7c-8103-77219139d5ed
புக்கிட் தீமா ஹில் பகுதியின் உச்சத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடும் தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் உள்ள பூங்­காக்­க­ளுக்­குப் பொது­மக்­கள் செல்­வ­தற்கு முன்­பாக அங்­குள்ள கூட்­டத்­தைப் பற்றி தெரிந்­து­கொள்ள வகை­செய்­யும் இணை­யத்­த­ளம் ஒன்றை தேசிய பூங்­காக் கழ­கம் தொடங்­கி­யுள்­ளது.

பூங்­காக்­க­ளுக்­குச் சென்று உடற்­ப­யிற்சி செய்ய விரும்­பு­வோர், தாங்­கள் செல்ல விரும்­பும் பூங்­காக்­களில் ஆக அண்­மைய கூட்ட நில­வ­ரத்­தைத் தெரிந்­து­கொள்ள இந்த ஏற்­பாடு உத­வும்.

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த புதிய நடை­மு­றை­கள் நடப்­புக்கு வந்த மூன்­றா­வது நாளான நேற்று, உடற்­பயிற்சி செய்­வ­தற்­காக மக்­கள் பூங்­காக்­க­ளுக்­குச் சென்­ற­னர்.

பூங்­காக்­க­ளி­லும் இயற்கை வனப்­ப­கு­தி­களிலும் கூட்­டத்­தைத் துல்­லி­ய­மாக கண்­கா­ணிக்க ஆளில்லா வானூர்­தி­களை தேசிய பூங்­காக் கழ­கம் பயன்­ப­டுத்­து­கிறது.

"பெரிய அள­வி­லான நிலப்­பரப்பைக் கொண்­டி­ருக்­கும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பூங்­காக்­க­ளி­லும் இயற்கை வனப்­ப­கு­தி­க­ளி­லும் கூட்­டத்­தைக் கண்­கா­ணிக்க 30 ஆளில்லா வானூர்­தி­கள் பயன்­படுத்­தப்­ப­ட­வுள்­ளன," என்று தேசிய பூங்­காக் கழ­கத்­தின் பூங்கா, பொழு­து­போக்­குப் பிரிவு ஆணை­யர் லியோங் சீ சியூ தெரி­வித்­தார்.

பீஷான்-அங் மோ கியோ பூங்கா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, புக்­கிட் தீமா இயற்கை வனப்­ப­குதி உள்­ளிட்­டவை அந்­தப் பூங்­காக்­களில் அடங்­கும்.

உய­ரத்­தி­லி­ருந்து ஆளில்லா வானூர்­தி­கள் எடுக்­கும் புகைப்­ படங்­கள் அரை மணி நேரத்­திற்கு ஒரு­முறை மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­கிறது. பூங்­காக்­களில் மக்­க­ளுக்கு இடையே பாது­காப்­பான தூர இடை­வெ­ளியை உறு­தி­செய்ய அதிக கூட்­டம் உள்ள குறிப்­பிட்ட பகு­தி­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­படும் என்று டாக்­டர் லியோங் சொன்­னார்.

பூங்­காக்­களில் கூட்­டத்தை அறிய மேல் விவ­ரங்­க­ளுக்கு https://safedistparks.nparks.gov.sg எனும் இணை­யப்­ப­க்கத்­திற்­குச் செல்­ல­லாம்.