என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் முகக்கவசங்களை அணியுமாறு ஃபேர்பிரைஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பேரங்காடிக்கு வரும் மற்ற வாடிக்கையாளர்கள், பேரங்காடி ஊழியர்களின் நலனைக் கருதி வாடிக்கையாளர்கள் முகக்கவசங்களை அணியுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பணிபுரியும் எல்லா ஊழியர்களும் முகக்கவசங்களை அணியுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது நடப்பில் உள்ள பாதுகாப்பான தூர இடைவெளி நடைமுறைகளுடன் முகக்கவசங்களை அணிவதும் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் என்று பேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியான் பெங் கூறினார்.
பேர்பிரைஸ் பேரங்காடிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், பேரங்காடிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.
பேரங்காடிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் வாடிக்கையாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

