தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை

1 mins read
5b161c3f-ab5c-4a5a-8c90-9b5684796e3e
-

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு ஊழியர் தங்கும் விடுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூடுதலாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமிப்பரவலை ஒழிக்கும் அதிரடித் திட்டத்தின் ஓர் அங்கமாக வெளிநாட்டு ஊழியர்கள் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 4ஆம் தேதி வரை வேலைக்குச் செல்லாமல் தத்தம் தங்குவிடுதிகளில் நாள் முழுவதும் தங்கவேண்டியுள்ளதால் அவர்களுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைச்சு இன்று(ஏப்ரல் 11) வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

தங்கும் விடுதிகளிலுள்ள பொது இடங்களும் கழிவறைகளும் நாளுக்குக் குறைந் தது மூன்று முறை சுத்தம் செய்யப்படும். அத்துடன் அங்குள்ள குப்பைகள் தினமும் ஒரு முறைக்கு மேல் அப்புறப்படுத்தப்படும். மேலும் சுத்தம் செய்யும் பணிகளில் மூன்றாம் தரப்பு குத்தகையாளர்களும் ஈடுபடுத்தப்படுவர் என்று அமைச்சு தெரிவித்தது. எஸ் 11 டார்மிட்டரி@ பொங்கோல், வெஸ்ட்லைட் தோ குவான், தோ குவான், சுங்கை தெங்கா லாட்ஜ் ஆகிய ஊழியர் தங்கும் விடுதிகளில் இந்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ள தெம்பனீஸ் தங்குமிடத்திற்கும் இதே நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த ஏற்பாடுகள் குறித்து தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் மனிதவள அமைச்சு கூறியது.