சிங்கப்பூரில் மேலும் ஒருவர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தார். அந்த 90 வயது சிங்கப்பூரர் இன்று (ஏப்ரல் 11) காலை இறந்ததாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டதாக ஏப்ரல் 3ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர் தேசிய தொற்றுநோய் நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இவருடன், இக்கிருமியால் மாண்டோரின் எண்ணிக்கை எட்டுக்கு அதிகரித்துள்ளது.
மேலும் 191 பேருக்குப் புதிதாகக் கிருமித்தொற்றியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. இவர்களில் 51 சம்பவங்கள், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையவை. 21 சம்பவங்கள், அத்தகைய விடுதிகளுடன் தொடர்பு இல்லாதவை. புதிதாக 35 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

