கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் முதற்தொகுதி நோயாளிகளை சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகத்தில் ஏற்றுக் கொள்ளும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், நடமாடும் 'அல்ட்ராசவுண்ட்' பரிசோதனை வாகனம், நடமாடும் எக்ஸ்ரே சோதனை வாகனம் ஆகியவை சிங்கப்பூர் எக்ஸ்போ வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
கிட்டத்தப்பட்ட 20 பேர் நேற்று முன்தினம் இரவு இரண்டு பேருந்துகளில் எக்ஸ்போ அரங்குக்கு வெளியேற இறங்கி னர். முதற்தொகுதி நோயாளிகள், குணமடைந்துக் கொண்டி ருப்பவர்களாக இருப்பார்கள் அல்லது இலேசான நோய் அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக் கப்பட்டது.
சிங்கப்பூரின் இரண்டாவது சமூக தனிமைப்படுத்தும் இடமாக சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஓர் அரங்கில் குணமடைந்துக் கொண்டிருப்போர் இருப்பார்கள். மற்றோர் அரங்கில் இலேசான நோய் அறிகுறி கள் உள்ளவர்கள் இருப்பார்கள். கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்து கொண்டிருப் போர் இதற்குமுன் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத் திலிருந்து தனியார் மருத்துவமனைகள் அல்லது பாசிர் ரிசில் உள்ள சிங்கப்பூரின் முதலாவது சமூக தனிமைப்படுத் தும் இடமான டி'ரிசோட் வளாகத்துக்கு மாற்றப்பட்டனர்.

