வீட்டிலேயே ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடுகள்

வீட்டிலேயே ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடுகள்

2 mins read
4a5d8054-f6ce-4756-96d5-7527f551ffc7
ஈஸ்டர் பண்டிக்கைக்காக 'என் இரட்சகர் தேவாலயம்' தயாரித்த காணொளியின் திரைநகல். (படம்: என் இரட்சகர் ஆலயம்) -

ஈஸ்டர் பண்டிகை நாளன்று தேவாலயங்களில் வழக்கமாக நடைபெறும் குதூகலக் கூட்டுப்பிரார்த்தனையும் ஒன்றுகூடலும் இம்முறை வேறு வடிவில் நடந்தேறின. கொவிட்-19 கிருமிப்பரவலைத் தடுக்கும் அரசாங்கத்தின் அதிர டித்திட்டத்தின்படி வீட்டிலேயே தங்கியுள்ள மக்களுக்காக தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்திருந்தனர் சிங்கப்பூரின் தேவாலய தலைவர்கள்.

Watch on YouTube

இயேசு கிறிஸ்து உதித்தெழுந்த திருநாளாகக் கொண்டாடப்படும் ஈஸ்டர் தின பிரார்த்தனைகளுக்குக் கூட்டம் நேரில் கூட இயலாதபோதும் அதற்கு முன்னதாகச் செய்யப்பட்ட காணொளிகள், ஒலிப்பதிவுகள் மற்றும் வாட்ஸ்அப் மடல்கள் வழியாக சபை உறுப்பினர்களை கூட்டு வழிபாட்டு உணர்வில் இணைக்க, கிருஸ்துவத்தின் ஆங்கிலிக்க பிரிவைப் பின்பற்றும் 'என் இரட்சகர் ஆலயம்' சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதாக அந்த தேவாலயத்தின் தலைமை குருவான அருட்திரு சாள்ஸ் தேவசகாயம் தெரிவித்தார். "நோயை முறியடிக்கும் அதிரடித் திட்டத்தின் அமலுக்கு முன்னதாகவே பரிசுத்த வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் ஆகியவற்றுக்காக நாங்கள் முன்கூட்டியே ஒளி, ஒலிப் பதிவுகளைச் செய்திருந்தோம். ஒவ்வொரு பிரார்த்தனையும் வழக்கமாக நடைபெறும் நேரங் களில் இந்தப் பதிவுகளைப் பார்க்க அல்லது கேட்க நாங்கள் எங்களது உறுப்-பி-னர்-களை ஊக்-கு-வித்தோம்," என்று அருட்திரு சாள்ஸ் கூறினார்.

இன்று காலை ஈஸ்டர் பிரார்த்தனைக்காக வழக்கமாகக் கூடும் கிட்டத்தட்ட 280 தேவாலய உறுப்பினர்கள் வீட்டில் இருந்தபடியே யூடியுப்பிலும் பேஸ்புக்கிலும் இந்தப் பதிவுகளைக் கண்டு மனதளவில் ஒன்றுகூடியதாக அருட்திரு தேவசகாயம் தெரிவித்தார். "வீட்டில் தனித்திருந்தாலும் உணர்வில் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருந்து இயேசு உயிர்த்தெழுந்த புனித தினத்தை அனுசரித்தோம்," என்றார் அருட்திரு சாள்ஸ். இந்தச் சேவையை ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.