கொவிட்-19 மோசடி ; 110,000 வெள்ளி பறிபோனது

கொவிட்-19 மோசடி ; 110,000 வெள்ளி பறிபோனது

1 mins read
0330b062-1435-4edb-903a-26bcd96d84b6
-

கொவிட்-19 தொடர்பான மோசடி ஒன்றில் 110,000 வெள்ளிக்கும் அதிகமான பணம் கையாடப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளளர்.மோசடியில் ஈடுபட்டிருந்தவர்கள் சுகாதார அமைச்சு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்திருந்தனர். கொரோனா கிருமி க்காக மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்தப் படும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை சீனாவின் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அந்த மோசடிக்கார்கள் பாதிக்கப்பட்டோரிடம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டோரின் பெயரில் அந்த மருந்துகள் பதிவு செய்யப்பட்டப் பொய்யுரைத்த மோசடிக்காரர்கள், அவர்களை விசாரணைகளுக்கு ஒத்துழைக்கச் சொல்லி அந்நபர்களின் அடையாள அட்டை எண், கடப்பிதழ் விவரங்கள், இணைய வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறு மோசடி செய்யப்பட்ட ஐவர் தங்களிடம் புகார் கொடுத்திருப்பதாக போலிசார் இன்று தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

எந்த அரசாங்க அமைப்பும் தனிப்பட்ட விவரங்களையோ பண மாற்றத்தையோ தொலைபேசி வழியாகக் கேட்காது எனத் தெரிவித்த சிங்கப்பூர் போலிஸ் படை எந்த முடிவை எடுக்கும் முன்னர் நண்பர்களிடமோ நம்பிக்கைக்குரியவர்களிடமோ ஆலோசனை பெறுவது நல்லது என்றும் பொதுமக்களை அறிவுறுத்துகிறது.

வரும் புதன்கிழமை (ஏப்ரல் 15ஆம் தேதி) முதல், தொலைபேசிக்கு வரும் அனைத்துலக அழைப்புகளின் எண்களுக்கு முன் '+' குறியீடு தோன்றும்.