200க்கும் அதிகமானோருக்கு தலா $300 அபராதம்

200க்கும் அதிகமானோருக்கு தலா $300 அபராதம்

1 mins read
582aa41b-ef1e-4589-b9d7-f7b5b8695dea
-

சிங்கப்பூரில் நடப்பில் உள்ள பாதுகாப்பான தூர இடைவெளி யைக் கடைப்பிடிக்கத் தவறிய பொதுமக்களில் 200க்கும் அதிகமானோருக்கு தலா $300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 20க்கும் அதிகமான சம்பவங்களில், அமலாக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தவர்களைக் கையாள போலிசின் உதவி நாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று முன் தினம் இரவு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, சிங்கப்பூரர்கள் பொது இடங்களில் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறினார். "எனினும், இந்த நடை முறைகளைக் கடைப்பிடிக்க தவறுவோருக்கு எதிராக நடவ டிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்," என்று அவர் எச்சரித்தார். முதன்முறையாக இந்தக் குற்றத்தைப் புரிவோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும் என்றும் மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்றும் திரு மசகோஸ் கடந்த சனிக்கிழமை எச்சரித்து இருந்தார். பொதுமக்களில் பலர் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து மேற்கண்ட கடுமையான நடவடிக்கை நடப்புக்கு வந்துள்ளது.