முகக்கவசம் அணிந்துதான் வங்கிக் கிளைகளுக்குள் நுழைய முடியும்

முகக்கவசம் அணிந்துதான் வங்கிக் கிளைகளுக்குள் நுழைய முடியும்

1 mins read
fb86da5d-da9f-4880-afc1-83e5a76f075d
-

வங்கிக்குள் நுழைய முற்படும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இப்போது முகக்கவசங்களை அணியவேண்டும்.

உடனடியாக செயல்படுத்தப்படும் இந்த விதிமுறை, வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமானது என்று சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் தெரிவித்தது. முகக்கவசங்களை அணியாதோர் வங்கிக் கிளை அலுவலகங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தானியக்க வங்கி இயந்திரங்களைப் பயன்படுத்த வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்களும் முகக்கவங்களை அணிய அறிவுறுத்தப்படுகின்றனர். அத்துடன் வாடிக்கையாளர்கள் இணைய வாங்கிச் சேவைகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.