முகக்கவசம் விற்பதாகக் கூறி ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்

முகக்கவசம் விற்பதாகக் கூறி ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்

1 mins read
679d82aa-ec29-41b6-9f4b-7b6b1a6451d1
-

முகக்கவசங்கள் விற்பதாகக் கூறி ஐந்து பேரிடமிருந்து $580 மதிப்பிலான பணத்தைக் கறந்த 19 வயது நூர் அத்தியானா அசிடி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இருவரிடம் மோசடி செய்து $350 தொகையைப் பறித்ததன் தொடர்பில் இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் மூவரை ஏமாற்றி அவர்களிடமிருந்து $230ஐ கறந்ததன் தொடர்பிலான எஞ்சிய குற்றச்சாட்டுகளும் அத்தியானாவுக்கு தண்டனை விதிப்பில் கருத்தில் கொள்ளப்படும்.

முகக்கவசங்கள் தொடர்பில் மோசடி புரிந்ததாக ஒப்புக்கொண்ட முதல் நபராக அத்தியானா விளங்குகிறார். $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவருக்கு மே 27ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும். அவரைத் தவிர்த்து, டேரல் சோங் ஸி யோங் என்பவரும் இதன் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவரது வழக்கு விசாரணையில் உள்ளது. ஆடவர் ஒருவரிடமிருந்து $175,000ஐ கறந்ததாக பிப்ரவரி 15ஆம் தேதி டேரல் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.