தாம் வசிக்கும் நல்வாழ்வு இல்லத்திற்கு திரும்ப மறுத்தவர் கைது

தாம் வசிக்கும் நல்வாழ்வு இல்லத்திற்கு திரும்ப மறுத்தவர் கைது

1 mins read
190c061f-db51-4c0b-8102-44d8c777e882
-

தாம் வசிக்கும் நல்வாழ்வு இல்லத்திற்குத் திரும்ப தவறிய 63 வயது ஆடவரை உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் போலிஸ் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தது. புளோக் 768 உட்லண்ட்ஸ் அவெ ன்யூ 6க்கு அருகே , இருக்கையில் அந்த ஆடவர் அமர்ந்திருந்ததை க் கண்ட போலிசார், அவரை எழுந்திருக்கப் பலமுறை சொல்லியும் அவர் உடன்பட மறுத்தார்.

தன்னைத் தொட வேண்டாம் என போலிசாரிடம் கூறுவதை க் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தாம் வசிக்கும் நல்வாழ்வு இல்ல த்திற்குத் திரும்ப தவறியதற்காக, ஆதரவற்றோர் சட்டத்தின்கீழ் அந்த ஆடவர் கைது செய்யப்பட்ட தாக கூறிய போலிஸ், சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பதையும் தெ ளிவுபடுத்தியது.

கைது செய்யப்பட்ட அதே நாளில் அந்த ஆடவர் மீண்டும் நல்வாழ்வு இல்லத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.மேம்பட்ட பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்யும் வழிமுறைகளுக்கு உடன்படாத அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட து.

போலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு இடைவெளி தூதர்களும் கூறுவதைச் செவிசாய்க்குமாறு போலிசார் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளனர்.