கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் ஒன்பதாவது மரணம்

கொரோனா கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் ஒன்பதாவது மரணம்

1 mins read
b4a13b68-ac2c-407a-bdd2-bc562bd57d80
சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வர் நேற்­றுக் காலை மர­ண­ம் அடைந்­த­னர். கொரோனா தொற்­றால் சிங்­கப்­பூ­ரில் முதன்முதலில் பதி­வான மர­ணங்­கள் இவை­தான். படம்: எஸ், டெஸ்மண்ட் ஃபூ -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக 65 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் மாண்டார். இவர் கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் மாண்ட ஒன்பதாவது நபராவார். நேற்று முன்தினம் நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 386 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 280 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. பொங்கோலில் உள்ள S11 விடுதியில் மேலும் 222 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இதுவே சிங்கப்பூரில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குழுமமாகும். நேற்று முன்தினம் நிலவரப்படி அங்கு மொத்தம் 586 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் நான்கு புதிய குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. காக்கி புக்கிட்டில் உள்ள சிட்டிவால், ஜாலான் குபோரில் உள்ள ஏபிசி விடுதி, டெக் பார்க் கிரசெண்ட் விடுதி, கிராஞ்சி விடுதி ஆகியவை அவற்றில் அடங்கும்.