அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கிடையே போதுமான பாதுகாப்பு இடைவெளி இருப்பதை உறுதி செய்யாத ஏறத்தாழ 30 நிறுவனங்களிடம் மனிதவள அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று காலை 10 மணி அளவில் 28 வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். இந்த நடவடிக்கையை மனிதவள அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து போலிஸ் ஆகியவை நடத்தின. பாதுகாப்பான இடைவெளி இல்லாமல் அமர்ந்திருந்த ஊழியர்கள் லாரியிலிருந்து இறங்க வேண்டியிருந்தது. அவர்களது முதலாளிகளுடன் கைபேசி மூலம் அதிகாரிகள் தொடர்புகொண்டனர். இறக்கிவிடப்பட்ட ஊழியர்களை அழைத்துச் செல்ல இன்னொரு வாகனத்தை முதலாளிகள் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

