தாதிமை இல்லத்தில் கொவிட்-19 பாதிப்பு

1 mins read
99e1c2ae-8aa4-4de8-aaac-af1ab2385ca4
பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தாதிமை இல்லமான உட்லண்ட்ஸ் கேர் ஹோம் தாதிமை இல்லம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் மேலும் ஒரு தாதிமை இல்­லம் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

வேன்­கார்ட் ஹெல்த்­கே­ரின் உட்­லண்ட்ஸ் கேர் ஹோம் தாதிமை இல்­லத்­தில் வசிக்­கும் 77 வயது முதி­ய­வ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­ப­கலில் அவ­ருக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­ன­தும் அவர் கூ தெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில்

தனிமைப்படுத்தப்பட்டார்.

பாதிக்­கப்­பட்ட உட்­லண்ட்ஸ் ஹோம் தாதிமை இல்­லத்­துக்கு ஆத­ரவு வழங்க சுகா­தார அமைச்­சு­டன் இணைந்து செயல்­ப­டு­வ­தாக ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்­புக்­கான முகவை அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

அர­சாங்­கத்­தால் நடத்­தப்­படும் உட்­லண்ட்ஸ் கேர் ஹோம் தாதிமை இல்­லத்­தில் பாதிக்­கப்­பட்ட முதி­ய­வர் தங்­கிய வார்­டும் பாதிக்­கப்­பட்ட மற்ற இடங்­களும் கிரு­மி­நா­சி­னி­யால் சுத்­தம் செய்­யப்­பட்­டுள்­ளன.

அந்­தத் தாதிமை இல்­லத்­தில் 248 படுக்­கை­கள் உள்­ளன.

பாதிக்­கப்­பட்­டுள்ள அந்த முதி­ய­வ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­க­ளைத் தேடும் பணி முடுக்­கி­விடப்­பட்­டுள்­ளது. அவர்­களில் தாதிமை இல்­லத்­தின் ஊழி­யர்­களும் அடங்­கு­வர். இவர்­கள் அனை­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

அந்தத் தாதிமை இல்லத்தில் மூத்தோர் பராமரிப்பு நிலையம் ஒன்றும் இருக்கிறது. அது தற்போது மூடப்பட்டுள்ளது. அதன் சேவைகளைப் பெறுவோருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.