அதிரடி நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்போது செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்

அதிரடி நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்போது செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்

3 mins read
004bd8ed-6dd5-4da0-8e15-69d219b83318
வெளிநாட்டு ஊழியர்கள் முகக் கவசம் அணிந்தபடி லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செல்கின்றனர். படம்: எஸ்டி -

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை முறி­ய­டிப்­ப­தற்­கான அதி­ரடி நட­வ­டிக்­கை­கள் நடப்பிலுள்ள இந்­தக் கால­கட்­டத்­தில் எதைச் செய்­ய­லாம், எதை­யெல்­லாம் செய்­யக்­கூ­டாது என்­பது பற்றி இன்­னும் உங்­க­ளுக்­குக் குழப்­பம் இருக்­கிறதா? அதன் தொடர்­பில் பல­ரும் கேட்­கும் ஒரு சில கேள்­வி­களும் அதற்­கான பதில்­களும் இங்கே தரப்­பட்­டுள்­ளன.

கேள்வி: நான் விவா­க­ரத்து ஆன­வன்/ஆன­வள். பிள்­ளை­களை நானும் என் முன்­னாள் மனை­வி­யும்/கண­வ­னும் மாறி மாறி பார்த்­துக்கொள்­கி­றோம். இந்த ஏற்­பாட்­டைத் தொட­ர­லாமா?

பதில்: தொட­ர­லாம். ஆயி­னும், சாத்­தி­ய­மி­ருந்­தால் பிள்­ளை­களை மாறி மாறி அனுப்­பு­வ­தை­யும் நட­மாட்­டத்­தை­யும் அல்­லது போக்­கு­வரத்­தை­யும் முடிந்த அள­விற்­குக் குறைத்­துக்­கொள்­ள­வும்.

கேள்வி: என் வீடு மிகச் சிறி­யது. எங்­களில் பல­ரும் எல்லா நேரங்­க­ளி­லும் வீட்­டி­லேயே இருக்­கி­றோம். அத­னால், அதிக இட­வசதி கொண்ட எங்­கள் உற­வினர்­க­ளின் வீடு­க­ளுக்கு நாங்­கள் மாறி மாறிச் சென்று இருக்­க­லாமா?

பதில்: கூடாது. இந்­தக் கால­கட்­டத்­தில் ஒரே வீட்­டில் வசிக்­காத குடும்ப உறுப்­பி­னர்­களும் நண்­பர்­களும் ஒன்­று­கூ­ட­லா­காது என்று சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது. முதல்­முறை விதி­மீ­றி­னால் $300 அப­ரா­தம் விதிக்­கப்­படும். மீண்­டும் விதி­மீ­று­வோ­ருக்கு அதிக அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம் அல்­லது நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­படும்.

கேள்வி: வேறு வீட்­டில் வசிக்­கும் என் காத­லன்/காத­லியை அல்­லது நான் மண­மு­டிக்க உள்­ள­வரை அல்­லது என் கண­வனை/மனை­வியை அல்­லது என் உடன்­பி­றந்­த­வ­ரைச் சந்­திக்­க­லாமா?

பதில்: கூடாது. இந்­தக் கால­கட்­டத்­தில் தொடர்­பில் இருக்க காணொளி அல்­லது தொலை­பேசி அழைப்­பு­கள் போன்ற மின்­னி­லக்க வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­துங்­கள்.

கேள்வி: பதிவு செய்­யப்­பட்ட முக­வ­ரி­யில் மட்­டுமே நான் இருக்க வேண்­டுமா?

பதில்: நீங்­கள் வழக்­க­மாக இருக்­கும் முக­வ­ரி­யில் மட்­டுமே தங்கி இருக்­க­வும். உங்­க­ளுக்கு வேறு ஏதே­னும் தங்­கு­மிட வச­தி­கள் இருந்­தா­லும்­கூட அங்­கு­மிங்­கும் செல்­லக்­கூ­டாது.

கேள்வி: பொது இடங்களில் வேறு ஒரு­வர் என்னரு­கில் வந்­தால் (ஒரு மீட்­டர் இடை­வெளிக்­குள்) என்ன செய்­வது? நான் தண்­டிக்­கப்­ப­டு­வேனா?

பதில்: பொது இடங்­களில் மற்­ற­வர்­க­ளி­டம் இருந்து குறைந்­தது ஒரு மீட்­டர் தொலை­வுக்­குத் தள்ளி இருங்­கள். ஒவ்­வொரு சம்­ப­வத்­தி­லும் உண்­மை­களை அம­லாக்க அதி­கா­ரி­கள் கவ­ன­மாக மதிப்­பி­டு­வர். மோச­மான விதி­மீ­றல்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

கேள்வி: தனி­ந­பர்­கள் எங்கு சாப்­பி­ட­லாம்?

பதில்: அத்­தி­யா­வ­சிய சேவை­களு­டன் தொடர்­பில்­லா­தோர் வீட்­டில் சாப்­பி­ட­வேண்­டும்.

உண­வுக் கடைக்­கா­ரர்­களும் காப்­பிக் கடைக்­கா­ரர்­களும் தங்­கள் கடை­க­ளுக்கு முன்­பாக உள்ள மேசை­களில் வைத்து தனி­யா­கவோ அல்­லது குறைந்­தது ஒரு மீட்­டர் இடை­வெ­ளி­யில் அமர்ந்தோ சாப்­பி­ட­லாம். மேசை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டாது.

அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளு­டன் தொடர்­பு­டைய ஊழி­யர்­கள் தங்­க­ளு­டைய வேலை­யி­டங்­களில் சாப்­பிட வேண்­டும். அதே நேரத்­தில் பாது­காப்­பான இடை­வெளி விதி­மு­றை­யைப் பின்­பற்ற வேண்­டும்.

விநி­யோக சேவை போன்ற அங்­கு­மிங்­கும் செல்ல வேண்­டிய வேலை­யைச் செய்­வோர் உண­வ­ருந்த வேண்­டு­மெ­னில் தங்­க­ளது அலு­வ­ல­கங்­க­ளுக்கு அல்­லது வீடு­களுக்­குத் திரும்ப வேண்­டும். அது சாத்­தி­ய­மில்லை எனில், தங்­க­ளது வாக­னங்­களில் இருந்­த­படி அல்­லது வெற்­றுத் தளங்­கள், பூங்கா மேசை­கள் போன்ற பொது இடங்­களில் அமர்ந்து சாப்­பி­ட­லாம். ஆயினும், கீழ்க்­கண்ட விதி­முறை­களை அவர்­கள் பின்­பற்­ற­வேண்­டும்:

 தனி­யாக அல்­லது மற்­ற­வர்­களி­டம் இருந்து குறைந்­தது ஒரு மீட்­டர் தொலைவு தள்ளி இருந்­த­படி சாப்­பிடவேண்­டும்.

 உண­வ­ருந்­து­வதை விரை­வாக முடித்­துக்­கொள்ள வேண்­டும்; சுத்­தத்­தைப் பேண­வேண்­டும்.

 அத்­தி­யா­வ­சிய சேவை மற்­றும் குறிப்­பிட்ட சேவை ஊழி­யர்­கள் என்­ப­தற்­கான அடை­யாள அட்­டையை வைத்­தி­ருக்க வேண்­டும்.

தக­வல்: சுற்­றுப்­புற, நீர்­வள அமைச்சு