மூத்த ஊழியர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்: முதலாளிகளுக்கு கோரிக்கை

2 mins read
2f4e7b9b-c335-4b5a-aa29-e747760b574e
-

மூத்த ஊழி­யர்­க­ளைப் பாது­காக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டுள்ளன என்­பதை முத­லா­ளி­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃ­பின் டியோ கேட்­டுக்­கொண்டுள்ளார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக முதி­ய­வர்­கள் வீட்­டி­லேயே இருக்­க­வேண்­டும் என்று அர­சாங்­கம் ஆலோ­சனை கூறி வரு­கிறது. அதே­நே­ரத்­தில், மூத்த ஊழி­யர்­கள் பல­ரும் தொடர்ந்து வேலை பார்க்­க­வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் இன்­ன­மும் வேலைக்­குச் சென்­று­வ­ரு­கி­றார்­கள்.

இந்த இரண்­டுக்­கும் இடை­யில் நில­வக்­கூ­டிய முரண்­பாடு பற்றி அமைச்­ச­ரி­டம் கேட்­ட­போது அமைச்­சர் முத­லா­ளி­க­ளுக்­குச் சில கோரிக்­கை­களை விடுத்­தார். அத்­தி­யா­வ­சிய சேவை­களில் ஈடு­பட்­டுள்ள முதிய ஊழி­யர்­கள், வெளியிடங்­களில் வேலை செய்­வ­தால் கவலை அடை­கி­றார்­கள். ஆகை­யால் முத­லா­ளி­கள் அவர்­க­ளி­டம் கரு­ணை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

தொலைத்­தொ­டர்பு ஏற்­பா­டு­கள் சரி­வ­ராத நிலை­யில் மற்­ற­வர்­க­ளு­டன் அணுக்­க­மா­கக் கலந்­து­ற­வாட வேண்­டிய தேவை இல்­லாத வேலை­களில் இத்­த­கைய ஊழி­யர்­களை முத­லா­ளி­கள் பிரித்­து­வி­ட­வேண்­டும் என்று அமைச்­சர் சுட்டினார். இப் ­ப­டிச் செய்ய முடி­யா­த­போது, முதிய ஊழி­யர்­க­ளுக்­குப் போதிய அள­வுக்­குப் பாது­காப்பு இருப்பதை முத­லா­ளி­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும். அத்­தி­யா­வ­சிய துறை­களில் பணி­யாற்­றும் எல்லா ஊழி­யர்­க­ளுக்­கும் முகக்­க­வ­சம் கிடைக்­கச் செய்­ய­வேண்­டும்.

ஒரு மீட்­டர் பாது­காப்பு நியதி கடைப்­பி­டிக்­கப்­படும் சூழ­லில் நிறு­வ­னம் நடை­மு­றைப்­ப­டுத்­தும் புதிய நிபந்­த­னை­கள் பற்­றிய தக­வல்­கள் மூத்த ஊழி­யர்­க­ளுக்கு உட­னுக்­கு­டன் தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் திரு­வாட்டி டியோ தெரி­வித்­தார். முத­லா­ளி­யும் ஊழி­ய­ரும் ஓர் உடன்­பாட்­டுக்கு வர­வில்லை என்­றால் அந்­தச் சூழ­லில் என்ன செய்­ய­லாம் என்று அவர் கருத்து தெரி­வித்­தார்.

ஊழி­யர் தன் விடுப்­பு­க­ளைச் சம்­ப­ளத்­த­டன் எடுக்கலாம். விடுப்பு எது­வும் இல்லை எனில் முத­லா­ளி­யும் ஊழி­ய­ரும் புதிய ஏற்­பா­டு­க­ளைக் காண­லாம். சம்­ப­ளம் இல்லா விடுப்பு போன்ற அம்­சங்­கள் அடங்­கிய கருத்­தி­ணக்­கத்­துக்கு இரு­வ­ரும் உடன்­ப­ட­லாம் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

தங்­கள் ஊழி­யர்­க­ளின், குறிப்­பாக முதிய ஊழி­யர்­க­ளின் கவ­லை­க­ளைப் புரிந்­து­கொண்டு அவற்­றைப் போக்க முத­லா­ளி­கள் முன்­வ­ர­வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.