சில நிபந்தனைகளின் கீழ் டாக்சி அல்லாத மற்ற வாகனமோட்டிகள் கட்டணம் வாங்கி பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஆனால் கார் பகிர்ைவ அனு மதிக்கும் சட்டத்தை மீட்டுக்கொள் வதாக நேற்று போக்குவரத்து அமைச்சு அறிவித்தது.
இதனால் கட்டணம் வாங்கி பயணிகளை ஏற்றிச் ெசல்வது இனி சட்டவிரோதமாகும்.
நேற்று அமலுக்கு வந்த புதிய விதிமுறையை மீறுவோருக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிய குழுக்கள் இந்தச் சேவையை நிறுத்திவிட்டாலும் ஆகப் பெரிய குழு ஒன்று தொடர்ந்து செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.
ஓட்டுநர்கள் தங்களுடைய வாடகை கார்களைப் பயன்படுத்தி கட்டணம் வசூலித்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். கார் பயணத்துக்கான செலவை மட்டுமே பயணிகளிடமிருந்து வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறைக்கு மேல் பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாது.
இந்த நிலையில் வர்த்தக, தொழில் அமைச்சுடன் ஆலோசனை நடத்திய நிலப்போக்குவரத்து ஆணையம், இந்தச் சேவையை அத்தியாவசியமற்ற சேவையாக வகைப்படுத்தியது.
இத்தகைய சேவையில் ஈடுபடும் வாகனமோட்டிகள் கிருமி பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியது.
தனியார் வாடகை கார் நிறுவனங்களான கிராப்பும் ரைட்டும் ஏற்கெனவே கார் பகிர்வுச் சேவையை நிறுத்திவிட்டன.
எஸ்ஜி ஹைடெக்-பிரிமியம் போன்ற சில உரையாடல் குழுவினர் கார் பகிர்வுச் சேவையில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தக் குழுவில் சுமார் 16,000 உறுப்பினர்கள் உள்ளனர். இதே போன்று 10,000க்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட 'எஸ்ஜி ஹைடெக் ஃபிமேல் டிரைவர்ஸ் ரைடர்ஸ்' என்ற குழுவும் கார் பகிர்வு சேவையில் ஈடுபட்டது. தற்போது இந்த இரண்டுமே கார் பகிர்வுச் சேவையை நிறுத்திவிட்டன.
ஆனால் 50,000க்கு மேல் உறுப்பினர்களைக் கொண்ட எஸ்ஜி ஹைடெக் என்ற குழு தொடர்ந்து கார் பகிர்வுச் சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
இந்த அமைப்பின் ஓட்டுநர்களும் வாடிக்கையாளர்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை வைத்து அவர்கள் கார் பகிர்வுச் சேவையில் ஈடுபடுவதாக நம்பப்படு கிறது.

