கொவிட்-19 தடுப்பூசியைக் கண்டுபிடிக்க போட்டி; சிங்கப்பூர் ஆய்வாளர்களும் தீவிரம்

2 mins read
2baa6084-3c66-4963-8a7b-c9064a9a2fd5
அமெரிக்காவின் சான் டியேகோ சோதனை கூடத்தில் ஆர்க்டுரஸ் தியரபியுடிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஆய்வு உதவியாளர் மரியோன் ஹோங், கொவிட்-19 கொடுந்தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

கொரோனா கிருமி உலகம் முழு­வ­தும் பரவி மனித உயிர்­க­ளுக்கு மிரட்­ட­லாக விளங்கி வரு­கிறது.

இது­வரை அந்த கிரு­மி­யால் கிட்டத்தட்ட இரண்டு மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

உலக முழு­வ­தும் 134,000 பேர் கிரு­மிக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் 24 மணி நேரத்­தில் புதி­தாக 447 பேருக்கு கிரு­மித்தொற்று காணப்­பட்­ட­தாக புதன்­கி­ழமை அன்று சுகா­தார அமைச்சு அதிர்ச்சி தக­வலை வெளி­யிட்­டது.

இந்­தச் சூழ்­நி­லை­யில் கொரோனா கிரு­மிக்கு தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டிக்க உலக நிறு­வ­னங்­கள் போட்டி போட்டு இயங்கி வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரும் இந்­தப் போட்­டி­யில் இறங்கி தடுப்­பூ­சி­யைக் கண்­டு ­பிடிப்­ப­தில் முன்­னேறி வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யும் அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்ட ஆர்க்­டு­ரஸ் திய­ர­பியு­டிக்­சும் தடுப்­பூ­சிக்­கான ஆய்­வு­களில் ஈடு­பட்டு அடுத்த கட்ட சோத­னைக்கு அடி­யெ­டுத்து வைத்­துள்­ளன.

அதா­வது தடுப்­பூ­சியை மனி­தர்­ க­ளி­டம் பரி­சோ­திப்­ப­தற்கு முன்பு விலங்­கு­க­ளி­டம் சோதிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­தச் சோத­னை­களில் தடுப்­பூசி மிக­வும் பாது­காப்­பா­னது என்­பது உறு­தி­யா­னால் மட்டுமே பின்­னர் மனி­தர்­க­ளி­டம் சோதிக்­கப்­படும்.

டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்­ளி­யின் கிருமி நோய்த் தொற்று திட்­டத்­தின் துணை இயக்­கு­ந­ரான பேரா­சி­ரி­யர் ஊய் எங் இயோங், ஆகஸ்டு மாதத்­தில் மனி­தர்­க­ளி­டம் கொரோனா கிருமி தடுப்­பூசி சோதிக்­கப்­ப­ட­லாம் என்­றார்.

சிங்­கப்­பூ­ரில் கண்­டு­பி­டிக்­கப்­படும் தடுப்­பூ­சிக்­கான உரி­மை சிங்­கப்­பூ­ரி­டம் இருக்­கும். அதே சம­யத்­தில் அமெ­ரிக்க நிறு­வ­னத்­தின் தடுப்­பூசி உலகம் முழு­வ­தும் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ படு­கிறது.

இதற்­கி­டையே உல­கில் மூன்று நிறு­வ­னங்­கள் தயா­ரித்­துள்ள தடுப்­பூ­சி­கள் மனி­தர்­க­ளி­டம் சோதிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் 67 ஆய்வு நிைலயங்­கள் கண்­டு­பி­டித்­துள்ள தடுப்­பூசி விலங்­கு­க­ளி­டம் சோதிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.