வீவக, 'யுஆர்ஏ' கார்பேட்டைகளில் இலவச நிறுத்தம் 20 நிமிடத்துக்கு நீட்டிப்பு

வீவக, 'யுஆர்ஏ' கார்பேட்டைகளில் இலவச நிறுத்தம் 20 நிமிடத்துக்கு நீட்டிப்பு

1 mins read
ba552371-6993-4fb1-b01d-7f56301448b1
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தங்கள் கார் பேட்டைகளின் கட்டணமில்லா சலுகை நேரத்தை பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்கு நீட்டித்துள்ளது. கோப்புப்படம்: எஸ்டி -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் இனி 10 நிமிட இலவச வாகன நிறுத்த சலுகை முடிவடைவதற்குள் அவசரப்படத் தேவையில்லை.

காரணம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நகர மறுசீரமைப்பு ஆணையமும் தங்கள் கார் பேட்டைகளின் கட்டணமில்லா சலுகை நேரத்தை பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்கு நீட்டித்துள்ளது என்று அதன் அறிக்கையில் கூறின. 20 நிமிட சலுகை நேரத்தைத் தாண்டும் வாகனமோட்டிகள் கார் பேட்டையை விட்டு புறப்படும்போது அதற்கான கட்டணத் தைச் செலுத்த வேண்டும். இந்தச் சலுகை மே மாதம் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.

அதிகமான சிங்கப்பூரர்கள் இணையம் வழி பொருட்களையும் உணவு வகைகளையும் தங்கள் வீட்டுக்கு அனுப்புமாறு கேட்பதால், உணவு மற்றும் பொருள் விநியோகிப்பாளர்களுக்கு அவற்றை அந்தந்த வீட்டுக்கு அனுப்ப கூடுதல் நேரம் தேவைப்படலாம். ஆகவேதான் இந்த சலுகை அறிவிக்கப்பட்டது என்று அவ்விரு அமைப்புகளும் கூறின.