தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெக்டோனல்ட்ஸ் உணவகக் கிளைகள் தற்காலிகமாக மூடப்படும்

1 mins read
92606d0f-2a8b-42bf-a164-1fb4efcb7850
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரிலுள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகக் கிளைகள் அனைத்தும் இன்று காலை 11 மணி முதல் மே மாதம் 4ஆம் தேதி வரை மூடப்படும். அந்த உணவகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் எழுவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விநியோகம் மற்றும் உணவை பொட்டலமிட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மெக்டோனல்ட்ஸ் உணவகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து உணவகக் கிளையின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சு அறிவுறுத்தியதாக மெக்டோனல்ட்ஸ் தனக்கு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் தற்போது 130 மெக்டோனல்ட்ஸ் கிளைகள் உள்ளன.