திடல்தட நட்சத்திரம் சி. குணாளன்: வீட்டில் இருங்கள்

கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான இக்காலகட்டத்தில் மனந்தளராது தொடர்ந்து வீட்டில் இருக்குமாறு முன்னாள் தேசிய திடல்தட வீரர் சி.குணாளன், 77, சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்து வரும் திரு குணாளன் பேசுவதைக் காணொளியாகப் பதிவு செய்து உள்ளார் அவரது மகளும் முன்னாள் திடல்தட வீராங்கனையுமான மோனா. ஆர்ச்சர்ட் ரோடு அருகில் உள்ள அவர்களது வீட்டில் எடுக்கப்பட்ட காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

“இது நல்ல சூழல் தானே? மடிக்கணினி, தோட்டம், என் காதலி” என்று திரு குணாளன் சிரித்தபடி காணொளியில் தம் மனைவி திருவாட்டி சோங் யூங் யின்னைக் குறிப்பிட்டுக் கூறினார்.

“நாங்கள் 1942ஆம் ஆண்டில் பிறந்தோம். கொவிட்-19 போன்ற நோய்ப் பரவலை இதுவரை நாங்கள் அனுபவித்ததில்லை. ஆனால் நாங்கள் இதிலிருந்து மேலும் வலுப்பெற்று மீண்டு வருவோம்,” என்றார் அவர். அத்துடன் கொவிட்-19 கிருமித்தொற்று சூழலைப் பொறுத்த வரை, அனைவரும் மீள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“சில காலம் பிடிக்கும். ஆனால் நாம் எதிர்மறையான சிந்தனை யுடன் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால் நாம் மீண்டு வருவோம். தீமை ஏற்படுவதிலும் ஏதேனும் ஒரு நன்மை விளையும்,” என்ற பொருளில் தம் எதிர்பார்ப்பை நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார் திரு குணாளன்.

‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பின் ‘ஏக்டிவ் எஸ்ஜி’ திடல்தட விளையாட்டு மன்றத்தின் மூத்த நிர்வாகியாக இருக்கும் திரு குணாளன், சிங்கப்பூரில் ஆக அதிகமான விருதுகளைப் பெற்ற திடல்தட வீரர்களில் ஒருவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!