சுய தொழில் செய்பருவக்கான வருமான நிவர்த்தி திட்டத்திற்கு(sirs) விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் அவ்வாறு செய்யத் தொடங்கலாம். அத்துடன், இந்தத் திட்டத்திற்குத் தாங்கள் தகுதி பெறுகிறார்களா என்பதை உறுதிசெய்ய விரும்புவோர் https://www.ntuc.com.sg/sirs/ என்ற தளத்திற்குச் செல்லலாம்.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 37 வயதை எட்டியவர்களும் அதற்கும் அதிகமானோரும் இத்திட்டத்திற்குத் தகுதிபெற்றால் இவர்கள் விண்ணப்பம் செய்யக்கூட தேவையில்லை என்று என்டியுசி தொழிற்சங்கம் தெரிவித்தது. மத்திய சேமநிதி கழகத்திலிருந்து அவர்களுக்கு இது குறித்து கடிதம் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் மூன்று காலாண்டுகளுக்கு (மே, ஜூலை, அக்டோபர்) ஒவ்வொரு தடவையும் 3,000 வெள்ளி வழங்கப்படும். கொவிட் 19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பைச் சமாளிக்க உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

