வீட்டில் தங்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மூவர்

வீட்டில் தங்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மூவர்

1 mins read
3480b094-cdc8-486f-b4be-6a6f9ded695d
-

சிங்கப்பூர்: இரண்டு சிங்கப்பூரர்களும் அமெரிக்காவைச் சேர்ந்த வர்த்தக பயண விமானியும் வீட்டில் தங்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் நாளை குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தபோது அவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கடிதங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த மூன்று சம்பவங்களைப் பற்றி குடிநுழைவு, சோதனை சாவடி ஆணையம் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் விவரித்தது.

14 நாள் நீடித்த அந்த உத்தரவு காலத்தின்போது இம்மூவரும் விதிமுறைகளுக்குப் புறம்பாக தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட சிங்கப்பூரர்கள், இந்தோனீசியாவிலிருந்து மார்ச் மாதம் 17ஆம் தேதி திரும்பிய 48 வயது சோங் சுன் வா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து மார்ச் 25ஆம் தேதி திரும்பிய சித்தி வான் சு'அய்டா என்று ஆணையம் தெரிவித்தது. குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மூன்றாமவர், அமெரிக்க விமானி 44 வயது பிரையன் டூகன் யர்கன். அவரும் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏப்ரல் 3ஆம் தேதி திரும்பினார்.