டிக் டாக் செயலிக்குச் சவால் விடுக்கும் சிங்கப்பூரின் 'லைக்கீ'

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள பிகோ(BIGO) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 'லைக்கீ' செயலி, தற்போது உலகில் ஏழாவது ஆக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியாக உள்ளது. இந்தச் செயலியின் மதிப்பு, சீனாவில் மட்டும் 14.1 பில்லியன் டாலர்.

சீனாவைச் சேர்ந்த ஜேசன் ஹு இந்தச் செயலியை நிறுவினார். 19 வயது வரை சாதாரண தொழிற்சாலை ஊழியராகப் பணியாற்றி அவர், பின்னர் பாடுபட்டு பெகிங் பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார். மைக்ரோசாப்ட், அலிபாப, வைவை ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, ஜாய் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் டேவிட் லீ, தான் தொடங்கியுள்ள புதிய நிறுவனத்தில் சேருமாறு திரு ஹுவை அழைத்தார்.

தற்போது 40களில் உள்ள திரு ஹு அந்நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

இந்தச் செயலில் மாதத்திற்குக் கிட்டத்தட்ட 350 மில்லியன் பயனீட்டாளர்கள் இணைகின்றனர். இது தென்கிழக்காசியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் சீனாவிலும் பிரபலம் அடைந்து வருவதாக ஹாங்காங்கின் 'தி ஸவுத் சைனா மார்னிங் போஸ்ட்' தெரிவித்தது.

சின்னஞ்சிறு காணொளிகளைத் தயாரிப்பதற்கான இத்தகைய காணொளி செயலிகளை இளையர்கள், குறிப்பாக 20 வயதுக்கும் குறைவானவர்கள் அதிகம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஷார்ட்ஸ் செயலியை யுடியூப் நிறுவனம் இவ்வாண்டின் இறுதிக்குள் தொடங்கப்போகிறது. லாஸ்ஸோ என்ற செயலியை ஃபேஸ்புக் 2018ல் ஏற்கெனவே நிறுவியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!