ஒருசில விமானப் பயணங்களைத் தொடரும் எஸ்ஐஏ, ஜெட்ஸ்டார் ஏஷியா

ஒருசில விமானப் பயணங்களைத் தொடரும் எஸ்ஐஏ, ஜெட்ஸ்டார் ஏஷியா

1 mins read
bf309cfc-7a24-4a6c-ba92-95828a67f7a9
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), சில்க்ஏர் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன. கோப்புப்படம்: எஸ்டி -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பெரும்பாலானவை மே மாதத்தில் பயணங்களுக்கு ஈடுபடுத்தப்படமாட்டாது.

மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் விமானப் பயணங்களின் குறைப்பு அறிவிக்கப்பட்டதுடன் விமான முன்பதிவுகள் வெகுவாகக் குறைந்திருந்தன.

பேங்காக், லாஸ் ஏஞ்சலிஸ், பிரங்க்பர்ட் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு எஸ்ஐஏ விமானங்கள் தொடர்ந்து பயணம் செய்யும் என்று அந்நிறுவனம் இன்று தெரிவித்தது.

இதற்கிடையே ஜெட்ஸ்டார் ஏஷியாவின் விமானங்கள் மணிலா, பேங்காக் மற்றும் கோலாலம்பூருக்குச் செல்லும் எனத் தெரிவித்தது.