குறைந்த வருமானம் பெறும் சீன குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்க அவர்களுக்குக் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் அல்லது குழந்தைகளைக் கொண்டு உள்ள அத்தகைய குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும் என்று சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் நேற்று அறிவித்தது. அடுத்த மாதம் முதல், பிள்ளைகள் உடைய 10,000 குடும்பங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் $300 கல்வி மானியம் வழங்கப்படும். இதற்கு எந்த விண்ணப்பமும் தேவையில்லை.
இந்திய சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற தற்போதுள்ள திட்டங்கள் போதுமானவை என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) தெரிவித்துள்ளது. தற்போது உள்ள திட்டங்களுக்குக் கூடுதல் வளங்களைத் திரட்டி மேலும் அதிகமானோருக்கு கைக�ொடுக்க முற்படும் சிண்டா, உதவி தேவைப்படுவோர் இந்தத் திட்டங்களுக்குத் தகுதி பெறாவிட்டாலும் அவர்களது குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து உதவி வழங்கப்படும் என்று கூறியது.

