தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஆமை, தவளை விற்பனையில் விதிமுறை மீறல் இல்லை'

1 mins read
ca43a250-68f4-4d1d-8c17-c2c2ae69bd58
-

கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றுக்கும் சீனாவின் வூஹானில் செயல்படும் கடல் உணவுச் சந்தை ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படு-கிறது.

அந்தச் சீனச் சந்தையில் வௌவால், புனுகுப்பூனை, பாம்புகள் போன்ற விலங்குகள் உயிரோடு விற்கப்படுகின்றன. இத்தகைய விலங்குகளின் இறைச்சியையும் அங்கு வாங்க முடியும். உலகம் முழுவதும் கொரோனா கிருமி தலைவிரித்தாடும் சூழலில் சிங்கப்பூரில் சைனாடவுன் காம்ப்ளக்ஸில் செயல்படும் ஈரச் சந்தை போன்றவை உலகளாவிய கண்காணிப்புக்கு ஆளாகி இருக்கின்றன.

இந்த நிலையில், உயிருடன் உள்ள ஆமைகள், தவளைகள், விலாங்கு மீன்களை விற்கும் சிங்கப்பூரின் ஈரச்சந்தைகள் எந்த விதியையும் மீறவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரில் சந்தைகளிலும் உணவுக் கடைகளிலும் உயிருடன் உள்ள ஆமைகள், தவளைகள், விலாங்கு மீன்களை அறுத்து விற்பதற்கும் சமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும் சந்தைக் கடைக்காரர்கள் சுற்றுப்புற பொதுச் சுகாதார சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று சென்ற வாரம் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.