கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் அரசாங்க உதவியுடன் கூடிய கடன்களைக் குறைந்த வட்டியில் பெற விரும்பும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு தொடர்கிறது. அப்படி சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அடுத்த ஈராண்டு காலத்திற்கு சிங்கப்பூர் நாணய ஆணையமும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் தகுதியுள்ள வங்கிகளுக்கு 0.1% வட்டியில் கடன் வழங்கும்.
இந்த நடவடிக்கை மேம்படுத்தப்பட்ட தொழில்நிறுவன நிதி ஆதரவுத் திட்டத்தின் நடைமுறை மூலதனக் கடன் மற்றும் தற்காலிக இணைப்புக் கடன் திட்டத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 8ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை பெறும் கடன்களுக்கு இந்தக் குறைந்த வட்டி விகிதம் பொருந்தும்.

