கூடுதலாக 220,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் முகக்கவசங்கள்

கூடுதலாக 220,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் முகக்கவசங்கள்

2 mins read
889b4ec7-de02-4b01-b2fc-069fa882691f
'மாஸ்க்-ஃபோர்ஸ்' திட்டத்தின் விரிவாக்கம் குறித்து கொடையாளிகள், தலைவர்கள் கலந்துரையாடல். (படம்: 'மாஸ்க்-ஃபோர்ஸ்' ) -

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பணிப்பெண்களுக்கும் முகக்கவசங்களை விநியோகம் செய்வதற்கு உருவாக்கப்பட்ட 'மாஸ்க்-ஃபோர் ஸ்' திட்டத்தின்கீழ் கூடுதலாக 220,000 வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் பயனடையவிருக்கின்றனர். இதனுடன் மொத்தம் 870,000 ஊழியர்களுக்கு முகக்கவசங்களுடன் தகவல் கையேடுகளும் விநியோகம் செய்யப்படவுள்ளன.

முகக்கவசங்களும் கையேடுகளும் கொண்டுள்ள கிட்டத்தட்ட 250,000 பொட்டலங்கள் பணிப்பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவை, அந்தப் பணிப்பெண்கள் வேலை பார்க்கும் வீடுகளுக்கு அனுப்பப்படும். முகக்கவசங்கள் மட்டுமின்றி கைகளைக் கழுவுவதற்கும் வாய் கொப்புளிப் பதற்கும் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளையும் விநியோகிப்பது குறித்து யோசிக்கப்படுவதாக 'மா ஸ்க்-ஃபோர்ஸின் பேச்சாளர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

'மாஸ்க்-ஃபோர்ஸ்' திட்டத்தின் ஏற்பாட்டாளர்களான தொடர்பு, தகவல் அமைச்சு மற்றும் கலாசார, சமூக இளையர் அமைச்சுக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் உதவி இயக்குனர் திரு இயோ குவான் குவாங் உள்ளிட்ட தலைவர்களுடன் பெரும் கொடையாளிகள் 'ஸூம்' மின்னிலக்கத் தளத்தில் இன்று சந்திப்பு நடத்தினர். அந்தச் சந்திப்பின்போது இந்தத் திட்டத்தின்மூலம் பயனடைக்கூடியவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.

ஊழியர் தங்குமிடங்களில் முன்பு தங்கியிருந்தவர்கள் தற்போது தங்கியுள்ள ரெட்ஹில் குளோஸ் தற்காலிக குடியிருப்பு இடத்தை நிர்வகிக்கும் வீடமைப்பு வளர்ச்சிக்கழக அதிகாரிளுடன் கொடையாளிகள் இந்தச் சந்திப்பின்போது உரையாடினர். நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னும் வெளியுறவு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்குமான மூத்த துணையமைச்சர் சேம் டானும் இந்த 'ஸூம்' சந்திப்பில் இணைந்தனர்.

பெரிய தங்குமிடங்களைத் தவிர, வேறு சில முதலாளிகளிடமிருந்தும் முகக்கவசங்களுக்காகத் தன்னை அணுகியதாகத் தெரிவித்த 'மாஸ்க்-ஃபோர்ஸ், உரிய நேரம் வரும்போது அந்த வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்கப்படும் என்றும் அதன் பேச்சாளர் கூறினார்.