ஊழியருக்கு சம்பளம்: முதலாளிகளுக்கு எச்சரிக்கை

ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்க முத­லா­ளி­கள் தங்­கள் வேலை ஆத­ரவுத் திட்ட வழங்­கீ­டு­க­ளைப் பயன்­படுத்­த­வில்லை என்ற புகார்­களை மனி­த­வள அமைச்சு விசா­ரிக்­கும்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­டுள்ள மந்­த­நி­லை­யின்போது தங்­கள் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்தை குறைக்­கும் அல்­லது அவர்­களை சம்­ப­ள­மில்லா விடுப்­பில் வைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­கள் அடுத்­த­டுத்த தவ­ணை­களில் குறைந்த வழங்­கீடு­க­ளையே பெறும் என்று அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

எதிர்­கால வழங்­கீ­டு­கள், தள்­ளு­ப­டி­களை ரத்து செய்­வது அல்­லது வொர்க் பாஸ் சலு­கை­களை குறைப்பதன் மூல­மா­கவோ தவ­றி­ழைக்­கும் முத­லா­ளி­கள் தண்­டிக்­கப்­ப­டு­வர் என அது குறிப்­பிட்­டது.

தொற்­று­நோய் முறி­ய­டிப்பு காலத்­தில் பல நிறு­வ­னங்­கள் ஊழி­ய­ருக்கு சம்­ப­ளம் வழங்­க­வில்லை என அமைச்­சுக்கு தக­வல் கிடைத்­தி­ருப்­ப­தாக அது கூறி­யது.

முத­லா­ளி­களே சிர­ம­மான காலத்தை எதிர்­நோக்­கு­கி­றார்­கள் என்­பதை அமைச்சு உணர்­கிறது. ஆனால், ஊழி­யர்­க­ளின் கருத்­தைக் கேட்­கா­மல், அவர்­களை ஈடு­ப­டுத்­தா­மல், சம்­ப­ள­மில்லா விடுப்பை நீட்­டிப்­பதோ அல்­லது சம்­ப­ளத்தை சேமிக்க வேறு நட­வ­டிக்­கை­களை எடுப்­பதோ ஏற்­றக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல. இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை அமைச்­சி­டம் தெரி­வித்­தால், வேலை­யி­லி­ருந்து நீக்கி விடு­வோம் என்று மிரட்­டு­வ­தும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தல்ல என்­றது அமைச்சு.

மேம்­ப­டுத்­தப்­பட்ட வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் கீழ் 1.9 மில்­லி­யன் உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் வேலை­கள் தக்­க­வைக்­கப்­பட, ஏப்­ரல் மாதம் சம்­ப­ளத்­தில் முதல் $4,600 தொகை­யில் 75% அர­சாங்­கம் வழங்­கும்.

அத்­து­டன் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் சம்­பளங்­க­ளைத் தொடர்ந்து வழங்­க­வேண்­டும் என்­ப­தை­யும் அமைச்சு முத­லா­ளி­க­ளுக்கு நினை­வூட்­டி­யது. மே 1ஆம் தேதி வேலை­யில் இருக்­கும் ஒவ்­வொரு எஸ்­பாஸ் அல்­லது வொர்க் பர்­மிட்­டில் வேலை பார்க்­கும் ஊழி­ய­ருக்­கும் $750 வெளி­நாட்டு ஊழி­யர் தீர்வை கழிவு வழங்­கப்­படும்.

தகுந்த புகார்­கள் விசா­ரிக்­கப்­படும் என்­றும் விசா­ர­ணை­கள் முடி­யும் வரை அந்த நிறு­வ­னங்­க­ளுக்­கான வேலை ஆத­ரவுத் திட்­டம் அல்­லது வெளி­நாட்டு ஊழி­யர் தீர்வை வழங்­கீ­டு­கள் நிறுத்தி வைக்­கப்­ப­ட­லாம் என்று அமைச்சு தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!