தேசியக் கொடியைக் காட்சிக்கு வைப்பது குறித்த விதிமுறைகளில் மாற்றம்

தேசியக் கொடியைக் காட்சிக்கு வைப்பது குறித்த விதிமுறைகளில் மாற்றம்

1 mins read
1ef486ee-b04d-400b-bd78-93920967852e
-

தேசியக் கொடியைக் காட்சிக்கு வைப்பது குறித்த விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைபடி மக்கள் இப்போது முதல் செப்டம்பர் வரை தேசிய கொடியை பறக்க விடலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா கிருமி பரவும் இந்நேரத்தில் மக்கள் ஒன்றிணைவதைக் பிரதிபலிக்க இந்தக் கொடியைக் காட்சிக்கு வைக்க பொதுமக்கள் பலர் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கலாசார, சமூக இளையர் அமைச்சு இன்று தெரிவித்தது.

அனைவரும் இணையாகப் பணியாற்றி இந்த நெருக்கடியை மீள்திறனுடன் எதிர்கொள்ள தேசிய கொடி நம் அனைவரையும் அழைப்பதாக கலாசார, சமூக இளையர் அமைச்சு கிரேஸ் ஃபூ கூறினார்.

அதிபர் ஹலிமா யாக்கோப் இந்த மாற்றத்திற்கு ஒப்புதலளித்தார். சிங்கப்பூரர்கள் தங்களது ஒருப்பாட்டை இவ்வாறு காண்பிப்பது குறித்து அகமகிழ்வதாக திருவாட்டி ஹலிமா ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

"கொவிட்-19 கிருமித்தொற்று எதிராக போரால் எதிர்வரும் நாட்கள் சவாலாக இருக்கும். ஆனாலும், நமது ஒட்டுமொத்த தைரியத்தாலும் உறுதியாலும் நாம் இதனை ஒன்றாகக் கடக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.