சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமான நிறுவனம் இது வரை ரத்து செய்யப்பட்ட தனது 96% விமானச் சேவைகள் ஜூன் மாதம் இறுதி வரை இயங்காது என்று நேற்று தெரிவித்தது. விமானச் சேவைகள் ரத்து முதலில் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டபோது அவை இம்மாதம் இறுதிவரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் எஸ்ஐஏ, ஜூன் மாதம் இறுதி வரை 15 நகரங்களுக்குத்தான் சேவையாற்றும் என்று அதன் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனோ கிருமித்தொற்றுக்கு முன் எஸ்ஐஏ, 35 நாடுகளில் உள்ள 140 நகரங்களுக்கு சேவையாற்றியது.
எஸ்ஐஏயின் 96% விமானச் சேவை ரத்து ஜூன் இறுதிவரை தொடரும்
1 mins read
-

