கிருமிப் பரவல் பாதிப்பால் பொருளியல் சுருங்கக்கூடும்

இவ்­வாண்டு சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்சி முன்­னு­ரைக்­கப்­பட்­ட­தை­விட குறை­யக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 1 முதல் 4 விழுக்­காடு வரை குறை­யும் என அர­சாங்­கம் எதிர்­பார்க்­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை முறி­ய­டிக்க கூடுதல் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்ள வேளை­யில், உள்­நாட்­டி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் முடங்­கி­யுள்­ள­தால் இந்­தப் பொரு­ளி­யல் நிலையை அர­சாங்­கம் எதிர்­பார்க்­கிறது.

இவ்­வாண்டு இரண்­டாம் பாதி­யில் நாட்­டின் பொரு­ளி­யல் படிப்­படி­யாக மீளும் பட்­சத்­தில் இந்த வளர்ச்சி விகி­தம் முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், குறு­கி­ய­கால பொரு­ளி­யல் வளர்ச்சி நிச்­ச­ய­மற்ற நிலையில் உள்­ளது.

உல­க­ள­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று எவ்வளவு விரை­வில் கட்­டுக்­குள் கொண்டு ­வ­ரப்­ப­டு­கிறது என்­ப­தைப் பொறுத்து நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்சி அமை­யும் என்று ஆணை­யம் விவ­ரித்­தது.

“உல­க­ளா­விய நிதிச் சந்­தை­கள் வீழ்ச்சி அடைந்­தால் முத­லீட்­டா­ளர் நம்­பிக்கை சரி­யும். இதன் விளை­வாக, நாட்­டின் பொரு­ளி­ய­லுக்­குப் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும்,” என்­றும் ஆணை­யம் கூறி­யது.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் ஆக மோச­மான மந்­த­நி­லை­யைச் சந்­திக்­கும் என்று நாட்­டில் முன்­னணி வகிக்­கும் மூன்று வங்கி­கள் எதிர்­பார்க்­கின்­றன.

ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்தி 4 முதல் 10 விழுக்­காடு வரை குறை­யும் என அவை முன்­னு­ரைத்­துள்­ளன. வேலை­யி­ழப்பு விகி­த­மும் முன்­னெப்­போ­தும் இல்­லாத அளவை எட்­டும் என்று அந்த வங்­கி­கள் எதிர்­பார்க்­கின்­றன.

2003ஆம் ஆண்­டில் ‘சார்ஸ்’ கிரு­மித்­தொற்­று­டன் ஒப்­பி­டு­கை­யில், கொவிட்-19 தொற்றை முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­து­வது சிர­மம் என்­பதை நாணய ஆணை­யம் சுட்­டி­யது. கார­ணம், மிக வேக­மா­கப் பர­வும் கிரு­மி­யாக கொவிட்-19 உள்­ளது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் நிச்­ச­ய­மற்ற தன்மை நில­வு­வ­தால், பய­னீட்­டா­ளர்­களும் தொழில் நிறு­வ­னங்­களும் செல­வி­னத்­தைக் குறைக்­கக்­கூ­டும்.

இத­னால், பொரு­ளி­யல் வளர்ச்சி படிப்­ப­டி­யா­கத்­தான் மீளக்­கூ­டும்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இங்கு உள்ள பொருட்களுக்கான தேவை குறைந்­தி­ருப்­ப­தால், சிங்­கப்­பூ­ரின் வர்த்­த­கம் தொடர்­பி­லான துறைக்­கான வளர்ச்சி வாய்ப்­பு­கள் மந்­த­மாக உள்­ளன.

எனி­னும், எந்­தத் துறை என்­ப­தைப் பொறுத்து, அதன் பாதிப்பு ஏற்ற இறக்­க­மாக இருக்­கக்­கூ­டும்.

இவ்­வாண்டு ஆட்கு­றைப்பு எண்­ணிக்கை 45,600ஆக அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று டிபி­எஸ் வங்கி முன்­னு­ரைத்­துள்­ளது.

இதற்கு முன்பு ஏற்­பட்ட மந்­த­நிலை­யில் பதி­வா­கி­யி­ருந்த ஆட்­கு­றைப்பு எண்­ணிக்­கை­யைவிட இது கணி­ச­மாக அதி­கம். வேலை இழப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளாக இருப்­பர் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!